கோவை ஈஷாவில் நடந்த மஹா சிவராத்திரி விழா - தூத்துக்குடியில் அனுபவித்த பக்தர்கள்

isha

கோவை ஈஷாவில் நடந்த மஹா சிவராத்திரி விழா - தூத்துக்குடியில் அனுபவித்த பக்தர்கள்

ஆண்டு தோறும் நடைபெற்று வருகிற மஹா சிவராத்திரி விழா, கடந்த 30 ஆண்டுகளாக மிக பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவை தாண்டி உலகில் பல நாடுகளில் மஹா சிவராத்திரி விழா நடைபெறுவதை பார்க்க முடிகிறது. ஈஷா யோகா மையமும், அதன் நிறுவனர் சத்குருவுமே அதற்கு காரணம் எனலாம். கடந்த 30 ஆண்டுகளாக ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் லட்சக்கணக்கில் வந்து கலந்து கொள்கின்றனர். அதில் ஆட்சியாளர்கள் உள்பட முக்கிய விஐபிக்கள் கலந்து கொள்கிறார்கள் என்பது கூடுதல் தகவலாகும். 

இந்தநிலையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில்  பக்தர்கள் வந்து குவிந்துவிடுவதால் போக்குவரத்து நெருக்கடி, அவர்களுக்கு அடிப்படை தேவைகளை செய்து கொடுப்பது போன்ற ரிஸ்க் ஆனது. அதனால் மாவட்ட தலைநகர் மற்றும் முக்கிய சென்டர்களில் இருந்து கொண்டே விழாவில் நேரலையில் கலந்து கொள்ளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அதன்படி  கோவையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவை பெரும்பாலான தொலைகாட்சி சேனல்கள் நேரலை ஒளிபரப்பு செய்கின்றன. பிரத்யேகமாக சமூக ஊடகங்கள் மூலமும் நேரலை ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது. கொரோனா தாக்கம் இருந்த காலத்தில், இது அனைத்தும் தடைபட்டது. சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு மீண்டும் சென்டர்களில் இருந்தே நேரலையில் பார்த்து அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.

அந்த வகையில், தூத்துக்குடி சென்டரில் உள்ள தன்னார்வ தொண்டர்கள், அழகர் மஹாலில் வைத்து மஹா சிவராத்திரி விழாவை கொண்டாடிட ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியை, தூத்துக்குடி வேலவன் ஹைப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஆனந்த், தூத்துக்குடி வீரமணி மருத்துவமனை டாக்டர் பெத்துக்கனி வெங்கட் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். ஆசிரமத்தில் நடப்பதுபோல் அன்னதானமும் வழங்கப்பட்டது. சுமார் 10 ஆயிரம் பேர் வந்து சென்றதாக தகவல் கூறுகின்றனர். கோவையில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவை அப்படியே தத்துருவமாக தூத்துக்குடியிலும் பார்க்க முடிந்தது. ஏற்பாடுகளை தூத்துக்குடி ஈஷா யோகா மைய சென்டரின் தன்னார்வ தொண்டர்கள் செய்திருந்தனர். தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் நிகழ்ச்சிக்கு உதவிகரமாக இருந்தன என்பது குறிப்பிடதக்கது.