புதுக்கோட்டை - ஏரல் - ஆத்தூர் இடையே மினி பேருந்து சேவை வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
Mini Bus

போக்குவரத்து வசதியில்லாத பகுதிகளுக்கு மினி பஸ் சேவையை தமிழக அரசு வழங்கி வருவது வரவேற்க தக்க நடவடிக்கையாகும். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி - திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே போக்குவரத்து வசதியில்லாமல் முடங்கி கிடக்கும் பகுதிகளும் உள்ளது. ஆறுமுகமங்கலம், சம்படி, இடையர்காடு,அகரம், கொற்கை போன்ற பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பழைய காயல்வழியாக தூத்துக்குடிக்கு செல்ல கூடிய பேருந்து வசதி மட்டுமே இருக்கிறது. இப்பகுதி மக்கள் புதுக்கோட்டை பகுதிக்கு செல்ல ஒரு பேருந்து வசதி கூட இல்லை. எனவே புதுக்கோட்டை - கூட்டாம்புளி - சம்படி - இடையர்காடு - ஏரல் - ஆத்தூர் இடையே மினி பேருந்து சேவையை வழங்க வேண்டும்.
இந்த சேவை மிகவும் அவசியமானதாக அமையும். மாவட்ட நிர்வாகம் இந்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.