தூத்துக்குடியில் வரும் 19ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் - கலெக்டர் தகவல்
Thoothukudi collector
தூத்துக்குடிமாவட்டம் 19.01.2024 அன்று தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளத்தில் 19.01.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிஅளவில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பல தனியார் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்துகொள்ளலாம்.
மேற்கண்டதகுதியுள்ள, தனியார்துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுரத்து ஆகாது. தனியார் நிறுவனத்தினர் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய இம்முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.