ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

sterlite news

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் - பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை

தமிழக பொருளாதாரம் மேம்பட வெளிநாட்டு முதலீட்டை கொண்டுவர மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கம் முப்பெரும் விழா தூத்துக்குடி பானு பிருந்தாவன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அதன் நிறுவனத் தலைவர் கே.என் இசக்கி ராஜா தேவர் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசியவர்கள் ஜாதி மத வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும்.பெண்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுவது தெரிந்தால் உடனடியாக களத்தில் இறங்கி அவர்களை பாதுகாக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கள்ளர் மறவர் சமுதாயத்தின்  ஒற்றைச் சான்றிதழ் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டின் சீரழிவுக்கும், சமூக சீர்கேட்டுக்கும் காரணமான இருக்கும் மதுவால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளன. பல  இளம் பெண்கள் விதவைகளாக மாறி வருகின்றனர்.எனவே அரசு தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும். தமிழகத்தில் இளைய தலைமுறை சீரழிய காரணமாகும் கஞ்சா போன்ற போதை பொருட்கள் தடை இல்லாமல் விற்கப்படுவதை பல்வேறு செய்திகள் மூலமாக அறிய முடிகிறது.  எனவே போதை பொருள் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாலியல் கொலை குற்றத்தில் ஈடுபடுபவர்களின் சொத்தை அரசு பறிமுதல் செய்ய வேண்டும். பாலியல் அல்லது படுகொலை செய்யப்பட்ட பெண்களை குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி அரசு வேலையும் வழங்க வேண்டும். வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கும் ஸ்மார்ட் வாட்ச் வழங்கி அதில் எஸ் ஓ எஸ் செயலி மூலமாக பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். 

கடந்த 2006 ஆம் ஆண்டு  நாங்குநேரியில் கொண்டுவரப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. அங்கே மின்சார ரயில் இன்ஜின் தொழிற்சாலை அமைக்க வேண்டும் தென் மாவட்ட இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும். சிறுகுறு தொழில்கள் தொடங்குவதற்கு ஒவ்வொரு தாலுகாவிலும் வாரந்தோறும் கடன் மேல நடத்தி இளைஞர்கள் தொழில் செய்வதை ஊக்குவிக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது. தற்போது அந்த ஆலை மூடப்பட்டு இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அரசு உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறந்திட ஆவணம் செய்ய வேண்டும். இதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அடைவதுடன் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும் வெளிநாட்டு முதலீடுகள் தமிழகத்திற்கு கொண்டுவர முனைப்பாக அமையும். தமிழக அரசு தூத்துக்குடியில் ஐந்து வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைக்க வேண்டும். நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு பூலித்தேவர் பெயர் வைக்க வேண்டும். கீழ துவள்களில் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட தியாகிகளின் படுகொலை பற்றி வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். கீழ துவள்களில் அனைவருக்கும் பரமக்குடியில் மணிமண்டபம் அமைத்து அரசு விழா கொண்டாட வேண்டும்.

ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய மருது பாண்டியர்களுக்கு சிவகங்கையில் சிலை அமைக்க வேண்டும். சென்னையில் பூலித்தேவருக்கு சிலை அமைக்க வேண்டும்.அரசு அலுவலங்களில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகைப்படம் வைக்க வேண்டும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சமூக விரோத செயல்களை ஈடுபடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ துவள்களில் அணையிலிருந்து குறுகிய காலத்தில் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது மத்திய அரசு அறிவித்துள்ள கோதாவரி காவிரி ஆறுகள் இணைப்பு திட்ட பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் சுதந்திரப் போராட்ட வீரர் வாலுக்கு வேலி அம்பலத்தின் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பது உட்பட 25 தீர்மானங்கள் இந்த முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக தூத்துக்குடி மூன்றாவது பதில் உள்ள முத்துராமலிங்க தேவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து ஊர்வலமாக பானு பிருந்தாவன் திருமண மண்டபம் வந்தனர். ஊர்வலத்தில் ஏராளமான மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை கையில் ஏந்தியவாறு வந்தனர்.