காயல்பட்டினம் பாத்திமா பள்ளியில் இருபெரும் விழா
school news

நாசரேத், மார்ச்.08:காயல்பட்டினம் பாத்திமா துவக்கப்பள்ளியில் இருபெரும் விழா நடந்தது.
காயல்பட்டினம் பாத்திமா மழலையர் மற்றும் துவக்கப்பள்ளியில் விளையாட்டு விழா , ஆண்டு விழா என இருபெரும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் அகமது முஸ்தா தலைமை வகித்தார். பள்ளி ஆலோசகர் எமி டெய்சி கிறிஸ்டி முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் கிப்ட்லின் வரவேற்றார். விஸ்டம் பப்ளிக் பள்ளி முதல்வர் சோபனா பிரியதர்ஷினி வாழ்த்திப்பேசினார்.
இதையடுத்து மாணவ - மாணவிகளின் நடனம், நாடகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.போட்டியில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஆசிரியை சாந்தி நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கிப்ட்லின் மற்றும் அலுவலர், ஆசிரியர் கள் செய்திருந்தனர்.