தூத்துக்குடியில் லாரியும், தனியார் பேருந்தும் மோதி விபத்து - பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

Accident

தூத்துக்குடியில் லாரியும், தனியார் பேருந்தும் மோதி விபத்து - பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்

தூத்துக்குடியில் இருந்து குலையன்கரிசல் ஊர் நோக்கி இன்று மாலை தனியார் பேருந்து சென்றது. பைபாஸ் பாலத்தை அப்பேருந்து கடக்க முயன்ற போது, நெல்லை ரோட்டில் இருந்து துறைமுகம் நோக்கி சென்ற டேங்கர் லாரியும், இப்பேருந்தும் வளைவில் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில் பேருந்தின் முன்பகுதி சேதமாகியது. அதில் பயணம் செய்த பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். இது குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.