சேறும் சகதியுமாக கிடக்கும் கூட்டாம்புளி காமராஜர்நகர் - கண்டு கொள்ளாமல் இருக்கும் குமாரகிரி ஊராட்சி

Thoothukudi collector

சேறும் சகதியுமாக கிடக்கும் கூட்டாம்புளி காமராஜர்நகர் - கண்டு கொள்ளாமல் இருக்கும் குமாரகிரி ஊராட்சி

பெரிய மழை பெய்ததால் தண்ணீர் தேங்குகிறது. தொடர் மழை பெய்வதால் தண்ணீர் தேங்குகிறது என்றால் பரவாயில்லை. சிறு மழை பெய்தால் கூட செல்ல வழியில்லாமல் தண்ணீர் தேங்குகிறது. அதில் மக்கள் தொடர்ந்து சென்று வருவதால் சேறும் சகதியுமாகி போகிறது. அந்த இடத்தை சற்று உயர்த்தும் வகையில் எதாவது கல்,மண் பொருட்களை போடுங்கள் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை உள்ளாட்சித்துறை கணக்கில் எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சி, கூட்டாம்புளியில் உள்ள காமராஜ்நகரில்தான் அத்தகைய நிலமை. 

கூட்டாம்புளி மெயின் ரோட்டில் இருந்து காமராஜர்நகருக்கு செல்லும் முகப்பில் ரோடு பள்ளமாக உள்ளது. சிறு மழை பெய்தால் கூட அதில் மழை நீர் தேங்கிவிடும் சூழ்நிலை உள்ளது. அதற்கான தீர்வை ஊராட்சி நிர்வாகம் எடுப்பதாக தெரியவில்லை. மழை காலம் முழுவதும் அப்பகுதி மக்கள் சேறும், சகதியுமான தண்ணீருக்குள்தான் சென்றாக வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளனர். இதன் மூலம் நோய் பரவும் ஆபத்து உள்ளது. இதேபோல் இதன் அருகே உள்ள முத்துநகர் தெருக்களும் இதேபோன்று பராமரிக்கப்படாமல் கிடப்பதும் வாடிக்கையாகிவிட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.