நாசரேத் பகுதியில் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரம்! மருத்துவ முகாம்கள் நடைபெற்றது

nazareth

நாசரேத் பகுதியில் தொற்று நோய் தடுப்பு பணிகள் தீவிரம்! மருத்துவ முகாம்கள் நடைபெற்றது

நாசரேத், ஜன.07: தமிழக முதலமைச்சர்,  சுகாதாரத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் உத்திரவின்படி, தூத்துக்குடி சுகாதார மாவட்டம், ஆழ்வார் திருநகரிவட்டாரத்தில் உடை யார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் மற்றும் தூத்துக்குடி சுகாதார மாவட்ட துணைஇயக்குனர் டாக்டர் பொற்செல்வன் வழி காட்டுதலின்படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்க ளில் நடமாடும் மருத்துவக் குழுவின் மருத்துவ முகாம்கள், நோய் கட்டுப்பாட்டு பணிகள்,பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், தொற்று நோய் பரவாமல் தடுத்தல், காய்ச்சல் கண்காணிப்பு, கொசுஒழிப்பு புகை மருந்து அடித்தல், மேல்நிலை நீர் தேக்கதொட்டி கழுவி சுத்தம் செய்தல், குளோனினேசன் ஆய்வு, பொது மக்களுக்கு வீடு,வீடாக குளோரின் மாத்திரைகள் வழங்குதல், காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் சிகிச்சை பணிகள். கூட்டு சுத்தம் தூய்மை பணி சுகாதாரக் கல்வி போதித் தல், நிலவேம்பு குடிநீர் வழங்குதல் ஆகிய பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. 

கடந்த இரண்டு வாரங்களாக நடமாடும் மருத்துவ முகாம் கள்மூலம்பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள் நடத் தப்பட்டு சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. ஆழ்வார்திரு நகரி ஒன்றியத்திற்குட்பட்ட 6 கிராம பஞ்சாயத்துக்கள் மற்றும் நாசரேத் பேரூராட் சிகளில் குடிநீர் நிலைகள் அனைத்தும் கழுவி சுத்தம் செய்யப்பட்டு குடிநீரில் குளோரின் அளவு ஆய்வு செய்யப்பட்டு பொதுமக்க ளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிராமங்களிலும் வழங்கப்படுகிறது.

அனைத்து பணிகளையும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன், உடையார்குளம் மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் பால்ஆபிரகாம், சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன் ஞானராஜ், ஆகியோர் மேற்பார்வை யில் நடைபெற்று வருகிறது.

செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீடுவிடாக சென்று குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணி, நோய் தடுப்பு மருந்து வழங்கும் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். இதுவரை 2448 வீடுகளுக்கு குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. தொற்று நோய் பரவாமல் தடுத்திட தொடர்ந்து கண் காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ முகாம்கள் மூலம் கண்டறியப்படும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, சிறு வியாதிகளுக்கு உடனுக்கு டன் சிகிச்சை அளிக்கப்படு கிறது.கொசுபெருக்கம் மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களை கட்டுப்ப டுத்த கொசு, ஒழிப்பு புகை மருந்து அடித்தல், கொசுப் புழு ஒழிப்பு பணி, நீர் தேங்கிய இடங்களில் எண்ணெய் பந்துகள், பீளிச்சிங் பவுடர் பந்துகள் கொண்டு கொசுப்புழு ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமங்களில் பீளிச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது.

இப்பணிகளை இணை இயக்குனர் டாக்டர் சண்முகசுந்தரம் அறந்தாங்கி டாக்டர் நமச்சிவாயம், துணை இயக்குனர் பழனி, டாக்டர் அனிதா,துணை இயக்குனர் அனிதா ஆகியோர் ஆய்வு செய்து, பணியாளர்களை உற்சகப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து மருத்துவம் முகாம்கள். தொற்றுநோய் தடுப்பு பணிகள் போர்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.