சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்பு மையமாக செயல்பட்ட நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி - சிஇஓ பாராட்டு

Nazareth

சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்பு மையமாக செயல்பட்ட நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி - சிஇஓ பாராட்டு

நாசரேத்  மே.29:சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்புமையமாகசெயல்பட்ட நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப் பள்ளிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி பாராட்டு தெரிவித்தார். 

வினாத்தாள் தயாரித்த ஆசிரியர்கள், நீட் பயிற்சி கொடுத்த ஆசிரியர்கள், வினாத்தாள் கட்டுக் கோப்பு மைய பொறுப்பாளர்களு க்கு பாராட்டு விழா தூத்துக்குடி சுப் பையா வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது‌. தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார்.  மாவ ட்ட கல்வி அலுவலர் குருநாதன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சி யில் கலந்து கொண்ட  தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்பு மையமாக செயல்பட்ட நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளிக்கு முதன்மை கல்வி அலுவலர் பரிசு வழங்கினார். மர்காஷிஸ்  மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுதாகர் மற்றும் தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சிறந்த வினாத்தாள் கட்டுக்கோப்பு மையத்திற்கான பரிசினை, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் மற்றும் உடற்கல்வி இயக்குனர்  பெலின் பாஸ்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

பரிசு பெற்ற ஆசிரியர்களை மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி  ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.