மழை வெள்ளத்தின் போது 40 பேரை காப்பாற்றிவர்களுக்கு நாசரேத்தில் விருது

nazareth

மழை வெள்ளத்தின் போது 40 பேரை காப்பாற்றிவர்களுக்கு நாசரேத்தில் விருது

நாசரேத்,பிப்.14: சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப்பாதிப்பின் போது தன்னுயிரைத் துச்சமாக மதித்து தீரமாகப்போராடி 40-க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றிய ஆழ்வார்திருநகரி இளைஞர் லிமின்டனுக்கும், இலக்கிய சாதனைக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ள நாசரேத் ஆறுமுகப்பெருமாளுக்கும் பாரா ட்டு விழா நடத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏஐடியுசி தொழிற் சங்கத்தின் சார்பாக நாசரேத் பேரூராட்சி அருகில் மேற்கண்ட சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் மாணிக்கம் தலைமை தாங்கினார். உதவிச்செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பின் போது தன்னுயிரைத் துச்சமாக மதித்து தீரமாகப் போராடி 40-க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களைக் காப்பாற்றிய ஆழ்வார்திருநகரி இளைஞர் லிமின்டனுக்கும், இலக்கிய சாதனைக்காக பல்வேறு விருதுகளை வென்றுள்ள தேரிக்காட்டு இலக்கியவாதி கண்ணகுமார விஸ்வரூபன் என்ற ஆறுமுகப்பெருமாள் ஆகியோருக்கும்  பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

பத்திரிகையாளர்கள் சங்கம்  சார்பில் மாநில துணை தலைவர் நிக்சன், தூத்துக்குடி புறநகர் மாவட்ட தலைவர் இருதய ஞானரமேஷ், பொருளாளர் சாந்தகுமார் உள்பட ஏஐடியூசி  நிர்வாகிகள் விருது வழங்கிகௌரவித்தனர். ஏஐடியூசி மாவட்டத் தலைவர் கிருஷ்ணராஜ், மாவட்டச் செயலாளர் லோகநாதன், மாவட்ட விவசாய சங்கத்தலைவர் ராமையா, மதிமுக மாவட்ட அவைத்தலைவர் இரஞ்சன், ஆழ்வார்திருநகரி வழக்கறி ஞர் சுடலைமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். திமுக நகரசெயலாளர் ஜமீன் சால மோன், அவைத் தலைவர் கருத்தையா, கட்டுமானச் சங்க தலைவர் டேவிட், வனக்குழுத் தலைவர் விஜயா, மூக்குப்பீறி கவுன்சிலர் ரீட்டா, கந்தசாமி, சுந்தரம், இஸ்ரவேல், அரிச் சந்திரன்,சௌந்தரபாண்டியன், ராமர், ஆறுமுகனேரி ஏஐடியுசி தோழர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.