பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 2024 - தமிழ்நாடு அளவில் 94.56 % தேர்ச்சி
+ 2 Result

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. சுமார் 7.60 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை போலவே மாணவிகள் 96.44 சதவீதம் தேர்ச்சி பெற்று முதலிடத்திலும், மாணவர்கள் 92.37 சதவீதம் தேர்ச்சி பெற்று அடுத்த இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டை தேர்ச்சி விகிதத்தைவிட இந்தாண்டு 1.22 சதவீதம் அதிகமாகும்.
மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 97.45 சதவீதம் பெற்று முதலிடத்திலும், 90.47 சதவீதம் பெற்று திருவண்ணாமலை மாவட்டம் கடைசி இடத்தையும் பெற்றிருக்கிறது.