அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்பவர்கள், இந்திய மொழியான இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள்?

Language News

அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்பவர்கள், இந்திய மொழியான இந்தியை ஏன் எதிர்க்கிறார்கள்?

மொழி என்பது தகவல் பரிமாற்றம் செய்வதற்கு உதவும் ஒரு கருவி என்று சாதாரணமாக சொல்லிவிடலாம். மொழியில் உள்ள ஓசை பல்வேறு அற்புத சக்தி கொண்டது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மொழிக்கான எழுத்துக்கள் மனித இயக்கத்துடன் பெரிதும் தொடர்புடையது. ஆதிகாலத்தில் மொழி எவ்வாறு உருவாகியிருக்க வேண்டும் என்று ஆராய்ந்து பார்த்தால், வெளியில் நடைபெறும் நிகழ்வுகள், ஓசையின் வாயிலாக மொழி வெளிப்படும்போது அது குறிப்பிட்ட உணர்வுகளை உடலில் உருவாக்குகிறது. அதாவது ஏற்கனவே உடலில் பதிவாகியிருக்கும் உணர்வுகளை தூண்டும் வகையில் வார்த்தைகள் வகுக்கப்படுகிறது. அதன் கோர்வைதான் மொழி. மொழிகளின் அருமை தெரியாமலே அதனை ஆதரிப்பவர்கள் ஏராளம் உண்டு. அது தனிப்பட்ட கூட்டமைப்பு பாசம். வெறும் தகவல் பரிமாற்றம் செய்யும் கருவிக்கு இவ்வளவு முக்கியத்துவமா என்று சிலர் கேட்பதுண்டு. ஆனால் மொழி என்பது உடல், மனம்,உருப்புகளை இயக்க உதவும் ஒரு கருவி என்பதை ஆழமாக ஆராய்ச்சி செய்வோர் அறிந்திருக்கின்றனர். அந்த வகையில்தான் மந்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வாழும் பகுதிக்கு தக்க வெறும் ஓசையாக பாவிக்கும் மொழிகளும் உண்டு. சக்தி மிக்க வார்த்தை கொண்ட மொழிகளும் உண்டு. உலகில் பெரும்பாலான மொழிகள் உடலுக்கும், உணர்வுகளுக்கும் தொடர்புடையதாக இருக்கின்றன. ஒரு மொழி உருவாகும் இடத்தில் அதன் உண்மை நோக்கம் இருக்கும். அதுவே வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்போது சற்று அதில் மாற்றம் ஏற்படலாம். அதன் நோக்கம் அறியாமலே மக்கள் பயன்படுத்தி வருவர். ஆங்கிலத்தில் ஏ எப்படி முதலில் இருக்கிறதோ அதுபோல்தான் அ என்று தமிழிலும் அ என்கிற ஓசையில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் வார்த்தைகள் வரிசை கட்டுகிறது. அப்படியானால் அ என்கிற வார்த்தை மனித உடலுக்கு முதலில் அவசியம் என்பதை இந்த மொழிகள் வலியுறுத்துகின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 

ஏ என்கிற முதல் ஆங்கில வார்த்தை உலகம்  முழுவதும் எப்படி வியாபித்திருக்கிறதோ அதுபோல் அ, ஆ என்பன உள்ளிட்ட தமிழ், சமஸ்கிருதம், இந்தி போன்ற மொழிகளின் முதல் வார்த்தைகள் இடம்பிடித்துள்ளது. அஉம்(ஓம்)என்று இந்திய மொழிகள் சொல்ல சொல்வது போல், ஆமேன் என்று பைபிளும், ஆமீன் என்று குரானும் சொல்ல சொல்கிறது. அப்படியானால் மொழி வெறும் தகவல் பரிமாற்றம் செய்ய கூடியது மட்டும் அல்ல. மனிதனை பெருமளவு இயக்க கூடியது. அந்த வகையில்தான் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ பைபிள்கள் பலவற்றிலும் சமஸ்கிருத வார்த்தைகள் நிறைய இடம்பெற்றிருக்கின்றன. அந்த சமஸ்கிருத வார்த்தைகளே அதற்கு பலம். அதுபோல் செய்யுள் வடிவிலுள்ள தமிழ் சக்தி உள்ளது என்பதை வெள்ளக்கார கால்டுவெல் கூட ஒப்புக் கொண்டிருக்கிறார். 

பல மொழிகளின் கலப்பு மொழியாக உள்ள இந்தியில் சமஸ்கிருத வார்த்தைகள் நிறையவே உள்ளன. தமிழ் இலங்கிய நூல்கள், தமிழ் ஆன்மிக நூல்கள் எப்படி சக்தி கொண்டதோ அதே அளவிலான இந்தி மொழியும் சக்தி கொண்டதுதான். இந்தியை பயன்படுத்துவோர் அனைவருக்கும் இந்த உண்மை தெரியும் என்பதில்லை. அதிகமானோர் பேச்சு மொழியாக பயன்படுத்துவதால் அப்படி இப்படியென்று சென்னை தமிழ் போல் அது திரிந்து கிடக்கும். சமஸ்கிருதம் கலந்த பைபிள் எப்படி சக்தி கொண்டதோ அதுபோலத்தான் சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியும் இருந்தாக வேண்டும். 

இந்தநிலையில்தான் இந்தி மொழியை எதிர்ப்போரின் நோக்கம் மீது சந்தேகம் கொள்ள வேண்டியது உள்ளது. இந்தி மொழி பரவினால் தமிழ் மொழி அழிந்து போகும் என்று அச்சம் தெரிவிப்போர் ஆங்கில மொழியால் தமிழ் அழிந்து வருவது குறித்து எந்த அச்சமும் கொள்வதில்லை. மேலும் ஆங்கில மொழியை அதிகார மொழியாக்க துடிக்கின்றனர். தற்போதைய நிலையில் ஆங்கில மொழியை யாரும் வேண்டாம், கூடாது என்று கூறப்போவதில்லை. அது உலக மக்களிடம் சென்று சேர்ந்திருப்பதால், தகவல் பரிமாற்றம் செய்வதற்கு ஆங்கிலம் அவசியம் என்றாகி உள்ளது. ஆனால் ஆங்கில மொழியால் உள்ளூர் மொழிகள் அழிகின்றன. என்பதையும் மொழி விசுவாசிகள் கவனத்தில் கொள்வது அவசியம்தான். அதற்கு உள்ளூர் தாய்மொழியின் அஸ்திவாரத்தை வலிமையாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்தியை காட்டி அச்சுறுத்தும் அரசியல்வாதிகள், தமிழ் வளர்ச்சிக்கு தமிழ் பிரசார சபா என்று எதையுமே வைத்திருக்கவில்லை. 

அப்படியானால் இந்தி மொழி எதிர்ப்பாளர்களின் நோக்கம் சந்தேகத்திற்குரியதாக உள்ளது. இவர்கள் அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்கிறார்கள் ஆனால் இந்திய மொழியான இந்தியை எதிர்க்கிறார்கள். ஆங்கிலத்தை ஆதரிப்பதுபோல் இந்தியையும், தமிழையும் ஒரே மாதிரி நிலைநிறுத்தியிருந்தால் தமிழ் மக்கள், தமிழ்நாட்டை தாண்டி இந்தியாவையும், இந்தியாவை தாண்டி அந்நிய தேசம் வரையிலும் சென்று வர வசதியாக இருக்கும். ஆனால் இந்தி மொழியை எதிர்க்க வேண்டும் நோக்கம் மட்டுமே இவர்களிடம் இருக்கிறது. அதற்கான காரணம் ஆய்வு செய்யப்பட வேண்டியதாகவே உள்ளது. சமஸ்கிருதம் கலந்த இந்தியை எதற்கான தடுக்கிறார்களோ தெரியவில்லை?. 

ஒரு கடையில் கிடைக்கும் மாம்பலம் மட்டுமே இனிக்கும் என்கிற நிலை இருந்தால்தான் அந்த கடைக்கு மட்டும் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும்.!