தமிழகத்தில் 2வது சிறந்த மாநகராட்சியாக தூத்துக்குடி தேர்வு - விருது வாங்குகிறார் மேயர் ஜெகன் பெரியசாமி
Thoothukudi news
தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் 2வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யபட்டுள்ளது என்று மேயர் ஜெகன் பெரியசாமி தகவல் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக வாரந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மில்லா்புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தலைமை வகித்தார். துணை மேயர் ஜெனிட்டா, மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் பெயர்மாற்றம் முகவரி மாற்றம் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி உள்ளிட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டு மாநகராட்சி ஜெகன் பெரியசாமி பேசுகையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க கொரோனா காலகட்டத்தில் பகுதி சபா கூட்டத்தின் மூலம் குறைகேட்பு நடைபெற்றது. ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பல தொடர்புகளுக்கு மண்டல அலுவலகத்தை பயன்படுத்தி வருவதால் இங்கு குறைதீா்க்கும் முகாம் நடத்தப்பட்டு முதலில் 97, 137, 131, 157, 105, என மண்டலங்களில் மனுக்கள் பெறப்பட்டு மேற்கு மண்டலத்தில் இரண்டாம் கட்ட குறைதீா்க்கும் முகாம் நடைபெறுகிறது.
இதில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் முறையாக பதிவு செய்யப்பட்டு அதில் சில மாற்றங்களுக்கு உடனடியாக ஆணைகள் வழங்கப்பட்டு மீதி 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படுகிறது. அதில் குறிப்பாக சாலை கால்வாய் உள்ளிட்ட வசதிகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதில் கல்லூரி, கோவில் ஆலயங்கள், மருத்துவமணைகள் என அந்த பகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பின்னர் அதை முறைப்படுத்தி செயல்படுத்துகிறோம். 4 வீடுகள் உள்ள பகுதிகளிலும் ஒரு வீடு இருக்கிற பகுதியிலும் சாலை வசதி கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அதையும் முறைப்படுத்தி செய்து கொடுப்போம். 50 கோடியில் ஒரு திட்டம் செயல்படுத்துகிறோம் என்றால் அது அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் பணிகள்நடைபெறுகின்றன. இந்த குறைதீர்க்கும் முகாம் தொடர்ந்து மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பல ஐஏஎஸ் அதிகாரிகள் இருந்தாலும் நம்முடைய ஆணையர் எல்லா வகையிலும் துணையாக இருந்து நல்ல ஒத்துழைப்பு வழங்குவது மூலம் வளர்ச்சி பணிகள் நடைபெறுகின்றன. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் தூத்துக்குடி மாநகராட்சி கடந்த 2023-24ம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றியதாகவும் சுகாதாரப் பணிகள், சாலை வசதிகள் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனை பாராட்டும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தில் இரண்டாவது மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட உள்ளது.
நாளை சென்னையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்குகிறார். இவ்விருதை மேயர் ஆகிய நானும், ஆணையரும் இணைந்து பெற்றுக் கொள்கிறோம். தூத்துக்குடி மாநகராட்சியில் மண்டல வாரியாக இதுவரை 5 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெறப்பட்ட 627 மனுக்களுக்கு 510 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. மேற்கு மண்டலத்தில் 77 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று மேயர் தெரிவித்தார்
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் ராஜாராம், மாநகர பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சுரேஷ்குமாா், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், இளநிலை பொறியாளர்சேகா், குழாய் ஆய்வாளர் ராமமூர்த்தி, சுகாதார நகா்நல அலுவலர் டாக்டர் வினோத்ராஜா, சுகாதார ஆய்வாளர் ஸ்டாலின்பாக்கியநாதன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, கவுன்சிலர்கள் பொன்னப்பன், இசக்கிராஜா, சந்திரபோஸ், சரவணகுமார், கந்தசாமி, கனகராஜ், இலக்கிய அணி தலைவர் சக்திவேல், திமுக வட்ட அவைத்தலைவர் சுப்பிரமணியன், வட்டப்பிரதிநிதி ஜெபக்குமார் ரவி, போல்பேட்டைபகுதி பிரதிநிதி ஜோஸ்பர் ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.