நாசரேத் பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம்!
Nazareth
நாசரேத்,மார்ச் 03:நாசரேத் பகுதியில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகா மில் 1480 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டன .
நாசரேத் அருகிலுள்ள உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் உடையார் குளம், குறிப்பன்குளம் சின்னமாடன் குடியிருப்பு, கருவேலம்பாடு, கண்டுகொண்டான் மாணிக்கம், வாழையடி, நாசரேத் சாமுவேல் தெரு, நாசரேத் பஸ் நிலையம், நாசரேத் கஸ்பா துவக்கப்பள்ளி,மணிநகர், முதலை மொழி , வகுத்தான்குப்பம், மேலவெள்ளமடம், வைத்திலிங்கபுரம் , திருவள்ளுவர்காலணி, பிள்ளையன் மனை ஆகிய 16 இடங்களில் நடந்தது. உடையார் குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். மாவட்ட மலேரியா அலுவலர் கருப்பசாமி, ஆழ்வார்திருநகரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பார்த்திபன் ஆகியோர் முகாமை பார்வையிட்டனர். மருத்துவ அலுவலர் கல்யாணி, சுகாதார ஆய்வாளர்கள் தியாகராஜன், ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிராம சுகாதார செவிலியர்கள் சுதா, தங்கபுஷ்பம், சுப்புலட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியர்கள் ரேவதி,அபிலா, ராஜேஸ் வரி. உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 1480 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டன.