கோரம்பள்ளத்தில் பேருந்து மோதி பைக்கில் சென்ற பெண் பலி - மகன் உள்பட 2 பேர் படுகாயம்
accident
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த சுடலைமணி மனைவி பேச்சிக்கனி(45). இவரும் இவரது மகன் முத்துராஜா (16) ஆகிய இருவரும், தனது உறவினரின் மகனான பாண்டிதுரை (20) என்பவருடன் மொபட்டில் சாத்தான்குளத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனராம். இதில், மொபட்டை பாண்டிதுரை ஒட்டிச் சென்றாராம். இவர்கள் தூத்துக்குடி - பாளையங்கோட்டை 4 வழிச்சாலையில் கோரம்பள்ளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வேகமாக வந்த தனியார் பேருந்து இவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
இதில், மொபட்டில் பயணம் செய்த 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில், பேச்சிக்கனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த முத்து, பாண்டிதுரை ஆகிய இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று பேச்சிக்கனியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.