நாசரேத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் - ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

nazareth

நாசரேத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் - ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

நாசரேத்,ஜன.29:நாசரேத் தில் மக்களுடன் முதல்வர் முகாமினை ஏரல் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தேர்வு நிலை பேரூராட்சி  நிர்வாகம் சார்பில் ஜோதி மஹாலில் மக்களுடன் முதல்வர் முகாம் நடத்தப்பட்டது. அதனை ஏரல் வட்டாட்சியர் கோபாலகிரு ஷ்ணன் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று துவக்கி வைத்தார். முகாமில் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சி நிர்வாகம்,தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டுத் துறை தமிழ்நாடு அமைப்புசாராதொழிலாளர் நலவாரியங்கள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வாழ்வாதார கடன் உதவிகள், காவல் துறை,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, எரிசக்தித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் ஆகிய துறைகளில் சம்பந்தமாக பொதுமக்களிடமிருந்து 636 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது.

இந்நிகழ்வில் நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரன், தலைவர் நிர்மலா ரவிசெல்வகுமார், முன்னாள்பேரூராட்சி தலைவர் ரவி செல்வக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஐஜினஸ் குமார், சாமுவேல், ஜேம்ஸ், அனி ஜமீன் சால மோன்,ஸ்டெல்லா ஜம்பு, கிளாரா, ஜெயா,பத்ரகாளி, எட்வர்ட் கண்ணப்பா, ரவீந்திரன்,  பேருராட்சி துணைத் தலைவர் அருண் சாமுவேல், அதிசயமணி,  பெனிட்ரோ, ரதி சந்திரன், செல்வக்குமார்,பௌத்ரம் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் பேரூராட்சி துறை அலுவலர்கள், அனைத்து அரசுத்துறை  அலுவலர்களும் கலந்து கொண்டனர்.