தூத்துக்குடி அருகே பெண் புகாரில் கிறிஸ்தவ பாதர் உள்பட 2 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

Complaint

தூத்துக்குடி அருகே பெண் புகாரில் கிறிஸ்தவ பாதர் உள்பட 2 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை மங்களகிரியில் தியானத்திற்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டது, பணமோசடியில் ஈடுபட்டது என்கிற புகாரில் கிறிஸ்தவ பாதர் உள்பட் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

சென்னை வேளச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் மகள் கேத்தரீன்(32). ஆசிரியையான இவருக்கு திருமணமாகி பினோஷா(8) என்று 8வது பெண் குழந்தை இருக்கிறது. குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கேத்தரீன், சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்திருக்கிறார். மன அழுத்தத்தை போக்குவதற்காக புதுக்கோட்டை அருகே மங்களகிரியில் உள்ள டிவைன் மெர்சி தியான இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஓராண்டு காலம் அங்கு சென்று வந்த கேத்தரீன் திடீரென அங்குள்ள பாதர் மைக்கேல் மகிலன் மற்றும் அவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ஜோஸ்வா(எ) இசக்கி ஆகியோர் மீது கூறியுள்ளார். 

தியானத்திற்கு சென்ற தன்னிடம் ஜோஸ்வா திருமணம் செய்து கொள்கிறேன் என்று பேசி பல முறை உடலுறவு கொண்டார் என்றும், அதன் பிறகு திருமணம் செய்ய மறுத்துவிட்டார் என்றும் அவர் தனியாக தொழில் தொடங்க ரூ.5 லட்சம் பெற்றதை தர மறுக்கிறார் என்றும், இது குறித்து பாதரிடம் முறையிட்டால் அவரும் தன்னிடம் தவறாக நடக்க பார்க்கிறார். இது குறித்து நியாயம் கேட்க சென்ற இடத்தில் தனக்கு கொலை மிரட்டல்விடுக்கிறார்கள் என்றும் போலீசில் புகார் கூறினார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட புதுக்கோட்டை போலீசார், யூ/எஸ் - 294(பி),420,417,506(1), IPC 4 OF TNPHW Act ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.