ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்! விரைவில் அடிக்கல் நாட்டு விழா

tamilnadu

ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்! விரைவில் அடிக்கல் நாட்டு விழா
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்! விரைவில் அடிக்கல் நாட்டு விழா
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க வரும் 5 ஆம் தேதி அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது.
ஆதிச்சநல்லூர்

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலை ஓரத்தில் 5 ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களை எடுத்த இடத்திலேயே கண்ணாடித்தளம் மேல் நின்று கொண்டு கீழே பார்வையிடும் (On Site) "உள்ளது உள்ளபடியே" என்ற அடிப்படையில் இங்கு பார்வை கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூர்

இந்தியாவின் முதல் பார்வைக்கூடத்தை வரும் 5 ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துப் பார்வையிட உள்ளார். இதனை அடுத்து அகழ்வராய்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கும் மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்.

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் கிடைத்துள்ளன. தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.