காஞ்சி: ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால் பேப்பர் கப்புகளை பயன்படுத்தி சிகிச்சை-அரசு மருத்துவமனையின் அவலம்!

tamilnadu

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாததால், டீக்கடையில் பேப்பர் கப்புகளை வாங்கி பயன்படுத்தும் அவலம் ஏற்பட்டுள்ளது.
treatment

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவனை காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அவரது தந்தை சிகிச்சைகாக அனுமதித்துள்ளார்.

govt hospital

அங்கே மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூச்சுக்குழாய் வழியாக மருந்து செலுத்த வேண்டுமென்று அறிவுறுத்தியுள்ள்னர்.

இந்நிலையில், மாணவனின் மூச்சுக்குழாய் வழியாக மருந்தை செலுத்துவதற்குத் தேவையான மருத்துவ உபகரணம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து டீக்கடையில் உபயோகிக்கும் பேப்பர் கப்புகளை வாங்கி வந்து அதன் உதவியுடன் மாணவனின் மூக்கு வழியாக மருந்தை செலுத்தியுள்ளனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

govt hospital

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு, பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அதுபோன்ற சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.