முத்தையாபுரம் கே.டி.கோசல் ராம் உயர்நிலைப் பள்ளியில் தேசிய இயற்கை மருத்துவ தின கொண்டாட்டம்

இயற்கை மருத்துவம்

முத்தையாபுரம் கே.டி.கோசல் ராம் உயர்நிலைப் பள்ளியில் தேசிய இயற்கை மருத்துவ தின கொண்டாட்டம்

முத்தையாபுரம் கே.டி.கோசல் ராம் உயர்நிலைப் பள்ளியில் தேசிய இயற்கை மருத்துவ  தினம் கொண்டாட்டப்பட்டது. 

தேசிய இயற்கை மருத்துவ தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 18ம் தேதி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இவ்வாண்டிற்கான தேசிய இயற்கை மருத்துவ தினம், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி மாவட்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவம் சார்பில் முத்தையாபுரம் கே.டி.கோசல் ராம் உயர்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. 

இதில், மாணவர்களுக்கு இயற்கை மருத்துவம், உணவு முறைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கினர். இயற்கை மருத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள் ,மாணவ மாணவியர்,மருத்துவர் இந்துமதி, மருத்துவர் சுமங்கலி, மருத்துவர் எஸ்தர் யூனிஸ், மருத்துவர் பிரியா டயானா மற்றும் தெரபிஸ்ட் பிரியா மற்றும் சரவணன் கலந்து கொண்டனர். அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் மற்றும் இனிப்பு அவல் வழங்கப்பட்டது.