வருகிறது மழைகாலம்..கசாயத்தை கையிலெடுத்த ஆயுர் வேதா டீம்
medical news
தென் தமிழகத்தின் மழைகாலம் விரைவில் வரவுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள அரசு துறை நிர்வாகங்கள் தயாராகி வருகிறது. அந்த வகையில் எளிய, மிகவும் முக்கியமான சிகிச்சை பிரிவுகளான ஆயுர்வேதா மற்றும் சித்தா பிரிவு மருத்துவ துறையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்தநிலையில் 10 வது தேசிய ஆயுர் வேத தினத்தை முன்னிட்டு பேரிலோவன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயுர் வேதா பிரிவு சார்பில் சிறப்பு ஆயுர்வேத சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
மக்களுக்கான ஆயுர்வேதம் என்ற தலைப்பில் ஆயுர் வேத மருத்துவ அலுவலர் ஜான்மோசஸ் ஆலோசனைகளை வழங்கி பேசினார். முகாமில் பங்குபெற்ற அனைவருக்கும் ஆயுர் வேத கசாயம் மற்றும் மூலிகை மரக்கன்றுகளை மருத்துவ அலுவலர் நல்லசிவம் வழங்கினார்.
nadunilai.com