திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களிடம் டூப்பிலிகெட் டிக்கெட் விற்கப்படுகிறது?

Thiruchendur Murugan

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களிடம் டூப்பிலிகெட் டிக்கெட் விற்கப்படுகிறது?

திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்களிடம் ஒரிஜினல் டிக்கெட்டுடன் சேர்த்து டூப்பிலிகெட் டிக்கெட்டும் விற்கபடுவதாக புகார் எழுந்துள்ளது.    

திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. ஆறுபடையில் வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூரின் முருகப்பெருமான் எதிரிகளை வீழ்த்துவான், எதிர்ப்புகள் இல்லாத வாழ்க்கை தருவான் என்கிற ஸ்தல அம்சத்தை வைத்து பக்தர்கள் அவ்வாறு கூடுகின்றனர். அதற்காக கோயிலுக்கு வரும் பக்தர்கள் உள்ளே சென்று சாமியை தரிசனம் செய்யும் போதுதான் படாதபாடு பட்டுவிடுகின்றனர். சாமியை தரிசிக்க இலவசமாகவும், கட்டண தரிசனமும் இருக்கிறது. பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் போது பக்தர்கள் சரிசனம் செய்ய அதிக அளவில் பணம் செலவு செய்யும் நிலை இருக்கிறது என்று கோயில் நிர்வாகம் மற்றும் கைங்கரிய வேலை செய்வோர் மீது பக்தர்கள் புகார் கூறிவருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. 

அதேபோன்று குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த ஒருவர் ரூ.100 டிக்கெட் 3 கேட்டதற்கு இரண்டு ஒரிஜினல் மற்றும் கொடுத்த டிக்கெட்டின் டூப்லிகெட் ஒன்றையும் கொடுத்துள்ளனர். ரூ.300 கொடுத்து அவர் வாங்கி கோயிலுக்குள் சென்றிருக்கிறார். உள்ளே போகும்போது டிக்கெட்டை பார்க்கும் போது ஒரே எண்ணுள்ள இரண்டு டிக்கெட்டும், அதற்கு அடுத்த வரிசை எண் கொண்ட இன்னொரு டிக்கெட்டும் இருந்துள்ளது. பக்தர்களிடம் ஒரிஜினலை கொடுத்துவிட்டு டூப்லிகெட் டிக்கெட்டை வைத்துக் கொள்ள வேண்டிய டிக்கெட்டையும் அதே பக்தருக்கு கொடுத்துள்ளனர். அந்த டிக்கெட் அடுத்த பக்தரிடம் போயிருந்தால் இது தெரிந்திருக்காது. அப்படியானால் டூப்லிக்கெட் டிக்கெட்டும் பணத்துக்காக விற்கப்படுகிறது என்று தெரியவருகிறது. 

இது குறித்து அந்த பக்தர் வேதனையுடன் இதனை நம்மிடம் தெரிவித்தார். இந்த புகாரை ஒரு தகவலாக ஏற்று கோவில் நிர்வாகம் தன்னை சரி படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இச்செய்தியின் நோக்கமாகும். இதில் தவறு நடந்துள்ளது அல்லது தவறு நடக்கிறது என்று தெரிந்தால் அதனை தடுக்க வேண்டும். சம்பந்தபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் அந்த பக்தர்கள்.