பத்திரிகையாளர் மீது தாக்குதல் - சாத்தான்குளத்தில் செய்தியாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...!

sathankulam

பத்திரிகையாளர் மீது தாக்குதல் - சாத்தான்குளத்தில் செய்தியாளர்கள், அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு என்பவர் குண்டர்களால் பயங்கரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்து அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த நிலையில் செய்தியாளரை தாக்கிய குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் படுகாயம் அடைந்த நேச பிரபுவுக்கு 3 லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவித்து இருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கடும் கண்டனத்தையும் பதிவிட்டு இருந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பத்திரிக்கையாளர் மன்றம் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக அமைப்புகள் ஆகியோர் சார்பில் சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்குடி.யூ.ஜெ.மாநிலத் துணைத் தலைவர் தூத்துக்குடி நிக்சன் தலைமை வகித்தார்.டி.யூ.ஜெ.தூத்துக்குடி புறநகர் மாவட்ட தலைவர் இருந்தய ஞானரமேஷ் முன்னிலை வகித்தார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும், கொலைவெறி தாக்குதல் நடத்திய குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது கோஷமிட்டனர்.

இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் நகர செயலாளர் வேணுகோபால், ஒன்றிய பாஜக தலைவர் சரவணன்,  வியாபாரிகள் சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ், தலைவர் அப்பு கண்ணன், மாவட்ட பாஜக ஆன்மீக பிரிவு செயலாளர் ராஜபாண்டியன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து, மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சக்திவேல் முருகன், மாவட்ட திமுக பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ உள்ளிட்ட பலர் தாக்குதல் சம்பவம் குறித்து விவரித்து பேசினர். 

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், வடக்கு வட்டார தலைவர் பார்த்தசாரதி, பேரூராட்சி கவுன்சிலர் லிங்கபாண்டி, பாஜக ஒன்றிய பொது செயலாளர் ராஜேஷ், முன்னாள் நகரத் தலைவர் ஜோசப், உள்ளாட்சி பிரிவு ஒன்றிய தலைவர் மணிகண்டன், ஒன்றிய சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் ஜெய சுந்தரராஜ், அதிமுக ஒன்றிய துணை செயலாளர் சின்னதுரை, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பாபு சுல்தான், விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ஜெயராமன், செந்தில் மற்றும் விசிக நிர்வாகிகள் உள்ளிட்ட சாத்தான்குளம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷமிட்டனர்.