நாசரேத் பள்ளிகளில் 75-வது குடியரசு தின விழா!
nazareth
நாசரேத்,ஜன.26:நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலே சன் மேல்நிலைப்பள்ளியில் 75-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள் ளித் தலைவர் எலிசபெத் ஜெபம் செய்து விழாவை துவக்கி வைத்தார்.
பள்ளி நிர்வாகி பியூலாசாலமோன் நம்முன்னோர்கள் சுதந்திரத் திற்காக செய்த உயிர் தியா கத்தையும், அதற்காக பல ஆண்டுகள் சிறையில் அனு பவித்த சித்திரவதைகளை யும், சுதந்திரத்தை நாம் எப் படி பேணிகாக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பள்ளி முதல்வர் ஜான்சி தேசிய கொடி ஏற்றி குடியரசு தின விழா செய்தி வழங்கினார். பள்ளி மாணவர்கள் மாறு வேட போட்டியிட்டு வந்தனர். பள்ளி குழந்தைகளுக்கு பேச்சு போட்டிகள் மற்றும் நாடகம் நடைபெற்றன. முடிவில் பள்ளி உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ் நன்றி கூறினார்.
நல்ல சமாரியன் மன நல காப்பகத்தில் 75-வது குடியரசு தினவிழா நாசரேத் உதவி காவல் ஆய்வாளர் ராய்ஸ்டன் தலைமையில் நடைபெற்றது. நாசரேத் உதவி காவல் ஆய்வாளர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமை உரை ஆற்றினார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரத்தின குமார் குடியரசு தின விழா சிறப்புரையாற்றினார்.விழாவில் சிறப்பு விருந்தினர் களாக நாசரேத் பேரூராட்சி
கவுன்சிலர் அதிசயமணி, வழக்கறிஞர் சஜு பெஞ்ச மின், ஆசிரியை ஜோதி, வணிகர் சங்க செயலாளர் செல்வன், ஏட்டு வேல்பாண் டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா நிறைவில் இல்ல மக் களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் இல்ல நிர்வாகி கிளாட்வின் ஜோசப் நன்றி கூறினார்.
நாசரேத் மர்காஷிஸ் மேல் நிலைப்பள்ளியில் 75- வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.தொழிற்கல்விஆசிரியர் ஜெய்சன் பாபு ஆரம்ப ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொகுத்து வழ ங்கினார்.தாளாளர் சுதாகர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.தலைமையாசிரியர் கென்னடி வேதராஜ் வர வேற்றார்.ஆசிரியை ஜெயந் திசுபாஷினி குடியரசு தின உரையாற்றினார். 7-ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ் தமிழிலும், ஒன்பதாவது மாணவர் வேதா வில்வின் ஆங்கிலத்திலும் குடியரசு தின சொற்பொழிவு நிகழ்த் தினர்.இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் ஏற்பா ட்டில் மாணவர்கள் சிலம்பம் மற்றும் வாள் சுழற்றுதல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டி னர்.
உதவிதலைமையாசிரியை சாரா ஞானபாய் நன்றி கூறினார்.பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர் கள். இளையோர் செஞ்சிலு வைசங்க மாணவர்கள், சார ணர் இயக்க மாணவர்கள், தேசியமாணவர்படைபிரிவு மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ் கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், தேசிய மாணவர் படைபிரிவு அலுவலர் சுஜித் செல்வ சுந்தர் ஆகியோர் செய்திருந்தனர்.