மாநில சுயாட்சி என்கிற பெயரில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக கருத்து சொல்வோர் தண்டிக்கப்பட வேண்டும்

National News

மாநில சுயாட்சி என்கிற பெயரில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக  கருத்து சொல்வோர் தண்டிக்கப்பட வேண்டும்

பல்வேறு பிரிவுகளை கொண்டுள்ள பாரதம், கலாச்சாரத்தால், பண்பாட்டால் வலிமையான தேசமாக விளங்கி வருகிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதே பாரதத்தின் மகிமை. அரசியல் அமைப்பு சட்டமும் அதனை நிலைநாட்டும் வகையில்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒற்றுமைக்கு இடையூறு வந்துவிட கூடாது என்பதற்காக ஒருமைப்பாடு பாதிக்கும் அளவிற்கு கருத்து சொல்வது குற்றம் என்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிராக செயல்படுவோர் குற்றவாளிகள் என்கிறது அரசியல் அமைப்பு சட்டம். அதே சட்டத்தில் மாநில உரிமைகளுக்கான வாய்ப்புகள் ஏராளம் வழங்கப்பட்டிருக்கிறது. அதுக்காக மாநிலங்கள் வாதிடலாம். அதேவேளை தேசிய ஒருமைப்பாட்டை சிதைக்கும் அளவிற்கு அந்த உரிமை கோரிக்கை சென்றுவிட கூடாது என்கிறது அரசியல் அமைப்பு சட்டம். 

ஆனால் சமீபகாலமாக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களை சேர்ந்த சில தலைவர்கள் மாநில உரிமை என்கிற பெயரில் மாநில சுயாட்சி என்கிற வாதத்தை முன் நிறுத்தி மக்களை ஒருங்கிணைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகவே பார்க்கப்படுகிறது. மத்தியில் உள்ள அரசை பிடிக்கவில்லை என்பதற்காக மத்திய அரசை விமர்சிக்கும் நோக்கில் இவர்கள் செய்யும் அரசியல் எதிர்காலத்தில் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக போய் நின்றுவிட கூடாது என்று தேசியவாதிகளுக்கு அச்சத்தை உண்டாக்குகிறது. 

மாநில சுயாட்சி என்கிற வார்த்தை கூட ஒரு வகையில் பிரிவினை நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது. ஒரு மாநிலம் சுயமாக ஆட்சி செய்கிறது என்றால் அது தனி நாடு என்றுதானே அர்த்தம்?. எனவே மாநில சுயாட்சி என்கிற வாதம் தவறானது. அதனால் மாநில சுயாட்சி என்று வாதிடுவோரிடம் இந்தியாவின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட நிர்வாகம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆர்.எஸ்.சரவணப்பெருமாள், நடுநிலை.காம் 8056585872