வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளை வழங்கியது பா.ஜ.க.!
Bjp News
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கடந்த 2023 ல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு புதியதாக ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகளை பாஜக கட்டிக் கொடுத்துள்ளது.
கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி இன்று (அக்டோபர் 10தேதி) திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கால்வாய் மற்றும் செம்பூர் நாணல்காடு பகுதிகளில் நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார். நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை வகித்தார்.
வீடுகள் வழங்கியதோடு, பயனாளிகளுக்கு பசுமாடும் வழங்கப்பட்டது. மேலும் 100 நபர்களுக்கு மேல் செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இருபதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தையல் மிஷின்களை வழங்கிய மாநில தலைவர், நேபாளில் நடந்த சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வால் மற்றும் கேடையம்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பாஜகவின் மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட பொதுச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அணிப்பிரிவு நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
nadunilai.com