டி.எம்.பி பவுண்டேஷன், ஐஐடி மெட்ராஸ் இணைந்து வழங்கியது - மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
TMB News
டிஎம்பி பவுன்டேஷன் மற்றும் ஐஐடிமெட்ராஸ் இணைந்து பிஎப்எஸ் ஐ துறைகளில் 145 மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கினர்.
TMB Foundation மற்றும் இந்திய தொழில்நுட்ப கழகம் மெட்ராஸ் (IIT-M) இணைந்து, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்காக விரிவான திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தை VOC கல்லூரி வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிந்தது. BFSI (Banking, Financial Services and Insurance) துறைகளில் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில், இந்த திட்டம் முக்கிய வங்கியின் பிரிவுகள், டிஜிட்டல் திறன்கள் மற்றும் சுய திறன்களை மையம்கொண்டு, ஜூலை 9, 2025 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
மொத்தம் 8 கல்லூரிகளிலிருந்து 1,800 மாணவர்கள் இந்த திட்டத்தில் சேர்வதற்கு இணையவழி தேர்வு முறையின் மூலம் 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 40 மணி நேர வகுப்பறை பயிற்சி மற்றும் 2 மாத இணையவழி பயிற்சி வழங்கப்பட்டு, 145 மாணவர்கள் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தனர். இன்று VOC கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பயிற்சி முடித்த மாணவர்களின் சாதனைகள் கொண்டாடப்பட்டன. வெற்றிகரமாக பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவில் பங்கேற்று மாணவர்களை டிஎம்பி பவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர் சாலி. எஸ். நாயர், ஐஐடி(எம்) அறிவுத்திறன் மேம்பாட்டு தலைவர் பாலமுரளி சங்கர், டிஎம்பி பவுண்டேஷன் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முத்தையா, டிஜிட்டல் ஸ்கில் அகாடமி நிறுவனர் டாக்டர். மங்களா சுந்தர், இன்போ பிஆர்வோ பயிற்றுவிப்பாளர் டாக்டர். பாலாஜி ஐயர், வ.உ.சி கல்லூரி முதல்வர் டாக்டர். சி. வீரபாகு, ஆகியோர் வாழ்த்தினர். மேலும் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்த அறிவுறுத்தல் வழங்கப்படும் என ஏற்பாளர்கள் உறுதியளித்தனர். இந்த திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, அருகிலுள்ள மாவட்டங்களிலும் இப்பயிற்சி விரிவாக்கம் செய்யப்படும் என TMB Foundation அறிவித்துள்ளது. இந்த கல்வியாண்டில் 1,500 மாணவர்களுக்கு பயிற்சியளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த முயற்சி, கல்வி மற்றும் தொழில் துறையின் இடையிலான இடைவெளியை குறைக்கும் முக்கியமான படியாகும், மேலும் TMB Foundation யின் நோக்கமாக இளைய தலைமுறையை மேம்படுத்தும் மற்றும் பிராந்திய வளர்ச்சியை உறுதி செய்யும் அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது.
nadunilai.com