ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் - தூத்துக்குடி - இராமேஸ்வரம் இடையே பேருந்து சேவை - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏயிடம் கோரிக்கை

Bus News

ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் - தூத்துக்குடி - இராமேஸ்வரம் இடையே பேருந்து சேவை - ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏயிடம் கோரிக்கை

ஸ்ரீவைகுண்டம்-சாயர்புரம்-தூத்துக்குடி-இராமேஸ்வரம் இடையே புதிய  பேருந்து சேவையை தொடங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ஸ்ரீவைகுண்டம் - சிவகளை - சாயர்புரம் - தூத்துக்குடி மதுரை, உவரி - திசையன்விளை - சாத்தான்குளம் - நாசரேத் - ஏரல் - சாயர்புரம் - தூத்துக்குடி பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் அடங்கிய மனு, பொதுமக்கள் சார்பில் 
ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ்யிடம் அளிக்கப்பட்டது. . 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், சாயர்புரம் போப் நினைவு மேல்நிலை பள்ளியில் வைத்து நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இந்த மருத்துவ முகாமை ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏவான ஊர்வசி அமிர்தராஜ் துவக்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் போடம்மாள்புரம் பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளரும், சமூக ஆர்வலருமான ஆர்.திசையநாதன் என்பவர் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ்யிடம், நிறுத்தப்பட்ட ஸ்ரீவைகுண்டம் - சாயர்புரம் - தூத்துக்குடி - மதுரை( தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1) , உவரி - நாசரேத் - ஏரல் - சாயர்புரம் - தூத்துக்குடி(தடம் எண்  145 எஸ் எஸ் எஸ்)இடையிலான பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  ஸ்ரீவைகுண்டம் - சிவகளை - சாயர்புரம் - தூத்துக்குடி - இராமேஸ்வரம் இடையே புதிய பேருந்து வசதி சேவையை தொடங்க வேண்டும் என்கிற கோரிக்கை அடங்கிய மனுவை அளித்தார்.  

அந்த மனுவில், ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக டெப்போவை சேர்ந்த தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 என்கிற பேருந்து ஸ்ரீவைகுண்டம் -  சாயர்புரம் -  தூத்துக்குடி - மதுரை இடையே 15 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டது. அப்பேருந்து தற்போது இயக்கப்படவில்லை. அதேபோல் திசையன்விளை டெப்போவை சேர்ந்த தடம் எண்  145 எஸ் எஸ் எஸ் என்கிற பேருந்து உவரி - திசையன்விளை - சாத்தான்குளம் – நாசரேத் – குரும்பூர் – ஏரல் – சாயர்புரம் – தூத்துக்குடி இடையே இயக்க கூடியது. இதுவும் தற்போது இயக்கப்படவில்லை. ஸ்ரீவைகுண்டம் டெப்போவிலிருந்து இயக்கப்படும் தடம் எண் 578 என்கிற பேருந்து எங்கள் பகுதி மக்களுக்கு பயன்படும்படி இயக்கப்படவில்லை. எனவே மேலே குறிப்பிட்டுள்ள இந்த பேருந்துகளை மீண்டும் முறையாக இயக்க வேண்டும்.  மேலும் சாத்தான்குளம் அல்லது ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சாயர்புரம் - தூத்துக்குடி வழியாக இராமேஸ்வரத்திற்கு புதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

1) ஸ்ரீவைகுண்டம் - மதுரை இடையிலான தடம் எண் 153 எக்ஸ் எஸ் 1 பேருந்தை ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அதிகாலையில் கிளம்பி சிவகளை - சாயர்புரம் - தூத்துக்குடி வழியாக மதுரைக்கு சென்று, அங்கிருந்து மீண்டும் தூத்துக்குடிக்கு வந்து, தூத்துக்குடியில் இருந்து மீண்டும் மதுரை சென்று அங்கிருந்து இரவில்   கிளம்பி தூத்துக்குடி - சாயர்புரம் வழியாக இரவில் ஸ்ரீவைகுண்டத்திற்கு சென்றடையும்படி செய்ய வேண்டும்.  

2) ஸ்ரீவைகுண்டம் டெப்போவை சேர்ந்த தடம் எண் 578 என்கிற பேருந்தை சனி,ஞாயிறு உள்பட அனைத்து நாட்களிலும் அதன் வழித்தடமான திருநெல்வேலி- செய்துங்கநல்லூர் - கருங்குளம் - திருவைகுண்டம் - சிவகளை - சாயர்புரம் - தூத்துக்குடி இடையே முறையாக, தொடர்ந்து இயக்க வேண்டும். 

3) தடம் எண் : 145 எஸ் எஸ் எஸ் என்கிற உவரி - நாசரேத் - ஏரல் - சாயர்புரம் - தூத்துக்குடி இடையிலான பேருந்தை, அதிகாலையில் சாத்தான்குளம் அல்லது திசையன்விளையில் இருந்து கிளம்பி உவரி சென்று திரும்பி மீண்டும் திசையன்விளை - சாத்தான்குளம் - நாசரேத் வழியாக ஏரலுக்கு காலை 7.15 மணிக்கு வந்து அங்கிருந்து 7.30 மணிக்கு கிளம்பி  8.45 மணிக்கு தூத்துக்குடிக்கு வரும் படி செய்ய வேண்டும். தூத்துக்குடியில் இருந்து 9.00 மணிக்கு கிளம்பி மீண்டும் சாயர்புரம் - ஏரல் - நாசரேத் சென்று, அங்கிருந்து சாத்தான்குளம் - திசையன்விளை வழியாகவோ அல்லது மெஞ்ஞானபுரம் - செட்டியாபத்து - உடன்குடி வழியாகவோ உவரிக்கு  செல்லலும் படி செய்ய வேண்டும். உவரியில் இருந்து சரியாக ஒரு மணிக்கு கிளம்பி, சென்ற வழித்தடம் வழியாக மீண்டும் ஏரலுக்கு மாலை 3.00 மணியளவில் வந்து, அங்கிருந்து 3.15 மணிக்கு கிளம்பி மீண்டும் தூத்துக்குடிக்கு 4.30 மணிக்கு வந்து, அங்கிருந்து 4.45 மணிக்கு கிளம்பி மீண்டும் அதன் வழித்தடத்தில் உவரிக்கு செல்ல வேண்டும். அங்கிருந்து கிளம்பி மீண்டும் திசையன்விளை - சாத்தான்குளம் - நாசரேத் அல்லது ஏரல் வரை வந்து திரும்பி மீண்டும் அதே வழித்தடத்தில் டெப்போவை அடையும்படி செய்ய வேண்டும்.   

3) சாத்தான்குளம் அல்லது ஸ்ரீவைகுண்டம் டெப்போவில் இருந்து அதிகாலையில் கிளம்பி சாயர்புரம் - தூத்துக்குடி- இராமநாதபுரம் வழியாக இராமேஸ்வரம் வரை சென்று வரும்படி புதிய பேருந்து சேவையை தொடங்க வேண்டும். நாங்கள் கோரிக்கை வைக்கும் பேருந்துகள் இயக்கப்படும்போது எங்கள் பகுதி மக்கள் தமிழ்நாடு அரசுக்கும், தங்களுக்கும் விசுவாசமாக இருப்பார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு கூறப்பட்டிருந்தது.  

மனுவை பெற்ற எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிச்சயமாக பஸ் விடுவதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் என்று உறுதியளித்தார்.