தூத்துக்குடி தெப்பகுளத்தை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் - எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை

Thoothukudi Sivan Kovil

தூத்துக்குடி தெப்பகுளத்தை பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும் - எஸ்.பி.சண்முகநாதன் கோரிக்கை

தூத்துக்குடி நகரின் மைப்பகுதியில் சிவன் கோவில் சம்பந்தபட்ட தெப்பகுளம் இருக்கிறது. மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெப்பகுளத்தை சுற்றி நடைமேடை மற்றும் குளத்திற்குள் கல் பதிக்கும் பணி நடைபெறுகிறது. அதற்காக குளத்தின் உள்ளே தண்ணீர் மற்றும் சகதிகளை அகற்றப்பட்டது. அப்போது தெப்பக்குளத்தின் சுற்று சுவர் 5 அடி வரை சரிந்தது. புதிய நடைபாதைக்கும் தெப்பக்குளத்திற்கும் நடுவில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. உடனே சீரமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி, அமைச்சர் கீதாஜீவன் மற்றும் அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர்.  

இந்தநிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், தனது கட்சி நிர்வாகிகளோடு சென்று  தெப்பகுளத்தை பார்வையிட்டார். அப்போது அவர், தூத்துக்குடி நகருக்கென்று ஒரு தெப்பகுளம் தான் இருக்கிறது. பழமை வாய்ந்த இந்த தெப்பகுளத்தில் மாநகராட்சி சார்பில் நடைமேடை அமைப்பதாக கூறி எந்த வித திட்மிடலும் இல்லாமலும் அந்த இடத்தை பற்றி உரிய அதிகாரிகளின் ஆய்வறிக்கையும் இல்லாமலும் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் நடைமேடை அமைக்கும் பணி நடந்திருக்கிறது. இந்நிலையில் தெப்பக்குளத்தில் நிரம்பி இருந்த தண்ணீரை வெளியேற்றியதின் விளைவாக மண்ணறிப்பு ஏற்பட்டு தெப்பகுளம் சுற்று சுவர் முற்றிலும் உள்வாங்கி தற்போது பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  வரும் தை மாதம் தெப்பதிருவிழா நடைபெறவுள்ள நிலையில் இந்நிகழ்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  எனவே, மாநகராட்சி நிர்வாகம் இந்த தெப்பகுளத்தில் உடனடியாக பணியை துவங்கி பழமை மாராமல் மேலும், இது போன்ற பிரச்சனைகள் வராத வண்ணம் தகுந்த பாதுகாப்பு அம்சங்களோடு தெப்பத்திருவிழாவிற்கு முன் குளத்தை சீரமைத்து தர வேண்டும் என்றார்.

அப்போது மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாவட்ட கழக பொருளாளர் சேவியர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன், சிறுபான்மை பிரிவு செயலாளர் கெ.ஜெ.பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், பகுதி கழக செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, சந்தனபட்டு, ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரு மணி, வழக்கறிஞர்கள் முனியசாமி, சரவணபெருமாள், ராஜ்குமார், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மகளிர் அணி நிர்வாகிகள் இந்திரா,  இராஜேஷ்வரி, அன்னபாக்கியம், ஷாலினி, ஸ்மைலா, முத்து லெட்சுமி, நிர்வாகிகள் பரிபூரணராஜா, ஐடி விங் சொக்கலிங்கம், இம்ரான், முள்ளகாடு ஸ்ரீராம், ராஜசேகர், வட்ட செயலாளர்கள் சங்கர், கொம்பையா, ஜெயகுமார், சேவியர்ராஜ், பாலஜெயம், சாம்ராஜ், சகயாராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.