வந்தே பாரத் இரயிலுக்காக திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இணைப்பு ரயில் - ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

Nazareth news

வந்தே பாரத் இரயிலுக்காக திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே  இணைப்பு ரயில் - ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை

நாசரேத்,ஜுலை.27:திருச்செந்தூர், காயல்பட்டணம், ஆறுமுகநேரி, குரும்பூர், நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் பகுதி மக்கள் சென்னை - திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் இரயிலுக்கு செல்வதற்கு வசதியாக திருச்செந்தூர் - திருநெல்வேலி இடையே இணைப்பு இரயில் இயக்க வேண்டும் என ஒய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் நாசரேத் வட்டார தமிழ் நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள்  சங்க  61-வது ஆண்டு விழா  மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.வட்டாரதலைவர் பேராசிரியர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சந்திரசேகர் வரவேற்றார்.பொருளாளர் ரூபன் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.நெல்லை ,குமரி மண்டல துணைத்தலைவர் தங்கவேல்,  முன்னாள் மாநில துணைத் தலைவர் அய்யலுசாமி , மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக் டர் சோனியா, நாசரேத்  பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகலா, வட் டார சுகாதார மேற்பார்வையாளர் பால் ஆபிரகாம்,ஒய்வு பெற்ற பேரா சிரியர் காசிராஜன்,தபால் தந்தி துறை ஒய்வு அதிகாரி சொர்ணமா ணிக்கம், பாண்டி, கண்ணன், வெங் கடாச்சாரி எந்த ராஜப்பா ஆகியோர் வாழ்த்திப்பேசினர். கூட்டத்தில் 70 வயது முடிவுற்ற ஓய்வூதியர்களு க்கு திமுகவின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி 10% கூடு தல் ஓய்வூதியம் வழங்கப்பட வேண் டும், குறைந்தபட்ச ஓய்வூதியம் 50% இருந்து 67% ஆக உயர்த்த வேண்டும்,மருத்துவ படி ஆயிரம் ஆக வழங்க வேண்டும், தேசிய ஓய்வூ திய கொள்கை ஏற்படுத்தி நாடு முழுவதும் ஒரே மாதிரியாக ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்,தமிழக அரசு ஓய்வூதி யர்கள் இறந்தால் குடும்ப பாது காப்பு நிதி ஒரு லட்சம் வழங்குவது போன்ற குடும்ப ஓய்வூதியர் இருந் தாலும் குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்றோர் நல வாரியம் அமைத்து ஓய்வு பெற்றோர் நலம் காத்திட மாவட்டம் தோறும் அரசு அலுவலர் கள் நல இல்லம் அமைத்திட வேண்டும்,புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கம்யூட்டேசன் தொகையை பிடிக் கும் காலத்தை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும்,இந்தியாவில் 4 மாநிலங்களில் நடைமுறை பின்பற் றப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் இந்நடை பின்பற்ற  வேண்டும் ,சென்னை போன்று அனைத்து ஊர்களில் வசிக்கும் மூத்த குடிமக்களாகிய அனைத்து ஓய்வூதியர்களுக்கும் இலவச பேருந்து பயண சீட்டு வழங்க வேண்டும், 

நாசரேத் பேரூராட்சி புகைவண்டி நிலையம் அருகில் பேரூராட்சியால் கட்டப்பட்ட சிறுவர் பூங்கா புதிதாக செயல்பட்டு வருகிறது.இதுபோன்று நாசரேத்தின் மையப்பகுதியில் பூங்கா ஒன்று புதிதாக அமைத்து தர வேண்டும்,  திருநெல்வேலி மற்றும் தூத்துக்கு டியில் இருந்து நாசரேத் மார்க்கமாக செல்லும்பேருந்துகள் முன்னறிவிப் பின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாசரேத் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவே தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு நாசரேத் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் முறையாக இயக்கப்பட வேண்டும், திருநெல்வேலி - சென்னை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் இரயிலுக்கு செல்வதற்கு வசதியாக திருச்செந்தூரில் இருந்து  இணைப்பு இரயில் விட வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதியோர் களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.மருத்துவதுறையில் இந்தியாவிலே முதலிடம் பெற்று  விருது பெற்ற மூக்குப்பீறி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சோனியாவை பாராட்டி பரிசுவழங்கப்பட்டது.சங்க  பொதுச்செயலாளர் கொம்பையா நன்றி கூறினார்.