தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா - கொடியேற்றத்துடம் தொடக்கம்
Thoothukudi PanimayaMadha
உலக புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(26.07.2024)தொடங்கியது.
தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 442ஆம் ஆண்டு திருவிழா இன்று தொடங்கியது. அதன்படி காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், 5.45 மணிக்கு இரண்டாம் திருப்பலியும் நடைபெற்றது. காலை 7 மணிக்கு கொடியேற்றறத்திற்கான சிறப்பு திருப்பலி, மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து தூய பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்குதந்தைகள் பொதுமக்கள் கொடியை பிடித்து ஏற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மரியே வாழ்க என முழக்கமிட்டனர். மேலும், புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் அமைச்சர் பெ. கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி,மாவட்ட ஆட்சியர் கோ .லட்சுமிபதி உள்பட பலர் பங்கேற்றனர்.
இத்திருவிழாவின் சிகர நிகழ்வான அன்னையின் திருவுருவ பவனி வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெறும். இந்த திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திருவிழாவின் பாதுகாப்புக்காக மாநகர் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.