புதியம்புத்தூர் அருள் மிகு செல்வவிநாயகர்- அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் ஆனித் திருவிழா

PuthiyamPuthur

புதியம்புத்தூர் அருள் மிகு செல்வவிநாயகர்- அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவில் ஆனித் திருவிழா

புதியம்புத்தூர் அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர், அருள் மிகு ஸ்ரீ.பத்திரகாளி அம்மன் கோவில் ஆனித்திருவிழா இன்று(6.7.2025)தொடங்கி ஒரு வாரம் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.  

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர், அருள் மிகு ஸ்ரீ.பத்திரகாளி அம்மன் கோவில் ஆனித்திருவிழாவின் முதல் நாளான இன்று இரவு 9 மணிக்கு ஆலடி முத்துச்செல்வன் குழுவினரின் நவீன வில்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை இரவு கோவில் சார்பில் திண்டுக்கல் கலையரசு மற்றும் பாஸ்டீன் குழுவினரின் இன்னிசை பட்டிமன்றம் நடைபெறுகிறது. நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு குதிரை ஊர்வலத்துடன் செண்டை மேளம், மாரிச்சாமி மேளத்துடன் பால்குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு அபிஷேக பூஜை, தீபாராதனை, இரவு 8 மணிக்கு கரகாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு மாலை சாத்துதல் நிகழ்ச்சியும், 10 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு சாமக்கொடை நடைபெறுகிறது. 

9ம் தேதி காலை 10 மணிக்கு பொங்கல் இடுதல், தொடர்ந்து மதிய கொடை, இரவு 9 மணிக்கு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம், பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு இந்து நாடார் இளைஞர் குழு சார்பில் டி.வி புகழ் அக்‌ஷயா குழுவினரின் இன்னிசை இரவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 10ம் தேதி ஜவுளி அண்ட் ரெடிமேட் வியாபாரிகள் சார்பில் நெல்லை எஸ்.ஆர்.சந்திரன் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11ம் தேதி ஸ்ரீ செல்வவிநாயகர் கலைக்குழு சார்பில் எம்.ஜி.செவுந்தரராஜன் குழுவினரின் இன்னிசை கலை நிகழ்ச்சி, 12ம் தேதி இரவு 10 மணிக்கு டி.எம்.சி.நண்பர்கள் நடத்தும் ஆண்டோ வேக்ஸ் ஷர்மிளா குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. 

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு நிர்வாகிகள் தலைவர் கே.ஆர்.புதுராஜாநாடார், செயலாளர் கே.ராஜாநாடார், பொருளாளர் பி.தருமராஜ்நாடார், துணைத்தலைவர் டி.பி.தங்கராஜ்நாடார், துணைச்செயலாளர் எம்.பி.செளந்திரபாண்டிநாடார், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஆறுமுகச்சாமிநாடார், டி.ஆர்.பொன்ராஜ்நாடார், டி.எம்.செல்வகுமார் நாடார் ஆகியோர் செய்து வருகின்றனர்.