நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது.

நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றத் துடன் துவங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக ஆலயத் திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.

முதலாம் திருவிழாவன்று ஞாயிற்றுக்கிழமையன்று மின்வாரிய ஊழியர்கள், அனைத்து அன்பியங்கள் சார்பில் சிறப்பு செய்யப் பட்டது. மாலை கொடிபவனி கொடியேற்றம், மறையுறை, நற்கருணைஆசீர் நடைபெற் றது.பங்குத்தந்தைதா.சலேட் ஜெரால்டு தலைமையில் புனித பனிமய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளா ளர், முதல்வர் எஸ்.கே.மணி, சேதுக்குவாய்த்தான் பங் குத்தந்தை பால்ரோமன், பிரகாசபுரம் தூய திரித்துவ ஆலய சேகரத்தலைவர் நவ ராஜ் ஆகியோர் முன்னிலை யில் மன்னார்புரம் பங்குத் தந்தை எட்வர்ட்ஜே அடிக ளார் கொடிமரத்தையும, புனித  கொடியையும் அர்ச்சித்து ஏற்றி வைத்தார். கொடியேற்றும் போது மரியே வாழ்க, அன்னையே வாழ்க என்ற மக்கள்  சத்த மிட்ட கோஷம் விண்ணைப் பிளந்தது.

திருவிழா காலங்களில் காலை ஜெபமாலையும், திருப்பலியும், மாலை ஜெப மாலை, மறையுறை, நற்க ருணை ஆசீரும் நடைபெறு கிறது.  ஒன்பதாம் திருவிழாவான ஆகஸ்ட் 14ஆம் தேதி  வெளி யூர்வாழ இறைமக்கள் சிற ப்பு செய்கின்றனர். காலை 6:30 மணிக்கு ஜெபமாலை திருப்பலி நடைபெறுகிறது. சவேரியார்புரம் பங்குத் தந்தை ரெமிஜூயூஸ் தலை மையில் நடைபெறுகிறது.

மாலை 6:30 மணிக்கு ஜெப மாலை, திருவிழா மாலை ஆராதனை மறை மாவட்ட முதன்மைக்குரு பன்னீர் செல்வம் தலைமையில் தைலாபுரம் பங்குத்தந்தை ததேயு,பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலய சேகரத் தலைவர் ஜெபஸ் ரஞ்சித் ஆகியோர் முன்னி லையில்  நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு அன்னை யின் தேர்ப்பவனி நடைபெ றுகிறது.

பத்தாம் திருவிழாவான ஆகஸ்ட் 15ஆம் தேதி புது நன்மை பெறுவோர் மற்றும் இறை மக்கள் சிறப்பு செய் கின்றனர். அதிகாலை 3 மணிக்கு தேரடி திருப்பலி நடைபெறுகிறது.காலை 8 மணிக்கு திருவிழாஆடம்பர  கூட்டு திருப்பலி செய்துங்க நல்லூர் பங்குத்தந்தை ஜாக் சன், திசையன்விளை பங்கு த்தந்தைடக்லஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறு கிறது.வள்ளியூர்அருட்பணி இசிதோர் மறையுறை ஆற் றுகிறார். காலை 11 மணி க்கு அன்னையின் தேர்ப் பவனே நடைபெறுகிறது. மாலை 6:30 மணிக்கு ஜெப மாலை நற்கருணைப்பவனி நடைபெறுகிறது. சாத்தான் குளம் மறை வட்ட முதன்மை குரு ரவிபாலன் தலைமை யில் சோமநாதபேரி பங்குத் தந்தை ஜெகதீஷ் மறை யுரை ஆற்றுகிறார். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தா.சலேட் ஜெரால்டு தலைமையில் அருட்சகோதரிகள், விழாக் குழுவினர் பங்கு இறைமக் கள் செய்து வருகின்றனர்.