கொங்கராயக்குறிச்சி சிவன் கோயிலில் வாஸ்து பூஜை நடந்தது

srivaikundam

கொங்கராயக்குறிச்சி சிவன் கோயிலில் வாஸ்து பூஜை நடந்தது

ஸ்ரீவைகுண்டம், மார்ச்.5:

கொங்கராயக்குறிச்சி சிவன் கோயிலில் வாஸ்து பூஜை நடந்தது.

கொங்கராயக்குறிச்சியில் ஆன்மிக சிறப்புபெற்ற ஸ்ரீபொன்னுறுதி அம்மாள் சமேத ஸ்ரீவீரபாண்டீஸ்வரர், ஸ்ரீசட்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் திருப்பணிகளை மேற்கொண்டு கும்பாபிஷேக விழா நடத்திடவேண்டும் என்று அறங்காவலர் குழுத்தலைவர் தியாகராஜன் தலைமையில் பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். 

இதன்அடிப்படையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசிஅமிர்தராஜ் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியிலுள்ள ஆன்மிக சிறப்புபெற்ற கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

இதற்கு, அமைச்சர் சேகர்பாபு, கொங்கராயக்குறிச்சி சிவன் கோயிலில் விரைவில் உபயதாரர் நிதி மூலமாக ரூ.22லட்சம் மதிப்பில் திருப்பணிகள் செய்யப்படவுள்ளது என்று பதில் அளித்தார். இதன்படி, கொங்கராயக்குறிச்சி சிவன் கோயிலில் திருப்பணிகளுக்கான வாஸ்து மற்றும் பாலஸ்தாபன பூஜைகளுக்கான சிறப்பு வழிபாடுகள் இன்று நடைபெற்றது.

திருப்பணிகளுக்கான வாஸ்து பூஜை வழிபாடுகளை செந்தில் தந்திரி குமார் பட்டர், குணசேர பட்டர் தலைமையில் அர்ச்சகர்கள் மேற்கொண்டனர். இதற்காக காலையிலே நடை திறக்கப்பட்டு அபிஷேகம், அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

கோயில் திருப்பணிகளை செங்கோல் ஆதீனம் தலைமையில் காளி உபவாசகர் நன்னிலம் ரமேஷ், கோயில் ஆய்வாளர் நம்பி, அறங்காவலர் குழுத்தலைவர் தியாகராஜன் மற்றும் பக்தர்கள் ஐம்பொன்களுடன் அடிக்கல் வைத்து தொடங்கி வைத்தனர்.

இதில், ஏழாயிரம்பண்ணை தீப்பெட்டி ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் நடராஜமூர்த்தி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருண் ராமதாஸ், டி.சி.டபிள்யூ. ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம், என்ஜினீயர் லட்சுமணன், திமுக வர்த்தக அணி பிரமுகரான தொழில்அதிபர் பாலசுந்தரம், தூத்துக்குடி வணிகர் சங்க துணைத்தலைவர் சோமசுந்தரம், பெங்களூர் டி.சி.டி.பி.சாப்ட்வேர் கம்பெனி நிர்வாக இயக்குநர் செந்தூரான் கார்த்திகேயன், கம்பம் சந்திரசேகர், முத்தாலங்குறிச்சி சிவன்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் காமராசு, நுகர்வோர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கல்லை ஜிந்தா, சுடலை, வழக்கறிஞர் ஞானமூர்த்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் முருகானந்ததாஸ், விஸ்வநாதன், உழவாரப்பணிக்குழு விக்னேஷ், சண்முகசுந்தரம் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.