உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் நாளை தைப்பூச தேரோட்டம்
Suyampulinga swamy
திசையன்விளை, ஜன. 24- உவரிசுயம்புலிங்க சுவாமி கோயிலில் நாளை (25 ம் தேதி) தைப்பூசத்திருவிழா தேரோட்டம் நடக்கிறது.
உவரி,சுயம்புலிங்க சுவாமி கோயிலில் நடைபெறும் மிக முக்கிய விழாக்களில் ஒன்றான, தைப்பூச தேர் திருவிழா,கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் சிகர நாளான நாளை (25ம் தேதி) 9வது திருவிழாவில், காலையில் சிறப்பு அபிஷேகம், உதய மார்த்தாண்ட பூஜை, கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை தேருக்கு புறப்பாடு, ரதோற்சவம்,காலை 7.30 மணிக்கு தேர் வடம் பிடித்தல்,தேரோட்டம்,தேவாரதிருமுறை பாராயணம், தேர் நிலை நின்றவுடன் தீர்த்தவாரி,மூலவர் சிறப்பு அபிஷேகம், உச்சிக்கால சிறப்பு பூஜை, அன்னதானம் நடக்கிறது.
மாலையில் உற்சவர் சிறப்பு அபிஷேகம், சாயரட்சை பூஜை, இரவு ராக்காலபூஜை,சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை ரிஷப்ரூடராக வீதி உலா, சமய சொற்பொழிவுகள்,இன்னிசை பட்டிம்ன்றம், பக்தி இன்னிசை நடக்கிறது. விழாவையொட்டி உவரிக்கு பல்வேறு ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படடுகின்றன.
ஏற்பாடிகளை கோயில் தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.