சேலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் எடப்பாடி பழனிச்சாமியிடம் சந்திப்பு
Admk news

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் மரியாதை நிமித்தமாக சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளையொட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
பின்னர் இருவரும் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி நிலவரமும் தற்போது மாவட்டத்திலுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கள நிலவரம் குறித்து இருவரும் கலந்துரையாடினார்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு முழுமையாக பணியாற்ற வேண்டும். தலைமை கழகத்திற்கும் கட்சியை வளர்ப்பதற்கும் முழுமையாக தன்னை ஈடுபடுத்தி பணியாற்றுபவர்களுக்கு உரிய நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
வட்டச் செயலாளர் துரைசிங் மற்றும் தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தார்கள்.