திருச்செந்தூரில் நாளை தைப்பூசம்: பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்
Thiruchendur Murugan
திருச்செந்தூர்,ஜன .24- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழா நாளை (ஜன.25ம் தேதி)நடக்கிறது. நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும்,தீபாராதனையும் நடக்கிறது.பின்னர் 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனிதநீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும்,உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்க்கு எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களூக்கு காட்சி கொடுக்கிறார்.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்த விரதம் இருந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.சுவமி சண்முகர் கடலில் கண்டெடுத்த தினமான இன்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு,3.30 மணிக்கு உதயமார்த்தண்ட அபிஷேகமும்.தீபாராதனையும் நடக்கிறது.பின்னர் காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும்,சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார்மாகி,தீபாராதனை நடக்கிறது.மாலையில் சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன்,ராமதாஸ், கணேசன், செந்தில்முருகன், இணை ஆணையர் கார்த்திக் கோவில் பணியாளார்கள் செய்து வருகின்றனர்.