நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா! அன்னையின் தேர் பவனி

Prakashapuram Church

நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத் திருவிழா! அன்னையின் தேர் பவனி

நாசரேத்,ஆக.16:நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலயத்தி திருவிழாவில் அன்னையின் தேர் பவனி நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகிலுள்ள பிரகாசபுரம் பரிசுத்த பரலோக  அன்னை ஆலயத் திருவிழா கடந்த 6ஆம் தேதி மாலையில் கொடி யேற்றத்துடன் துவங்கியது. திருவிழா காலங்களில் காலை ஜெபமாலையும், திருப்பலியும், மாலை ஜெபமாலை, மறையுறை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.

9ஆம் திருவிழாவான ஆகஸ்ட் 14 ஆம் தேதி  வெளியூர் வாழ் இறைமக்கள் சிற ப்பு செய்தனர். காலை 6:30 மணிக்கு ஜெபமாலை திருப்பலி சவேரியார்புரம் பங்குத்தந்தை ரெமிஜூயூஸ் தலைமை யில் நடைபெற்றது. மாலை 6:30 மணி க்குஜெபமாலை,திருவிழா மாலை ஆரா தனை மறை மாவட்ட முதன்மைக்குரு பன்னீர் செல்வம் தலைமையில் தைலா புரம் பங்குத்தந்தை ததேயு, பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலய சேகரத் தலைவர் ஜெபஸ் ரஞ்சித் ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது. இரவு 11 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி நடைபெற்றது.தேர்பவனிதுவங்கியதும் மரியே வாழ்க, அன்னையே வாழ்க என்று பொதுமக்கள் சத்தமிட்ட கோஷம் விண்ணைப் பிளந்தது.

பத்தாம் திருவிழாவான ஆகஸ்ட் 15ஆம்தேதி புதுநன்மை பெறுவோர் மற் றும் இறைமக்கள் சிறப்பு செய்தனர். அதிகாலை 3 மணிக்கு தேரடி திருப்பலி நடைபெற்றது. காலை 8 மணிக்கு திரு விழா ஆடம்பர  கூட்டுத் திருப்பலி செய் துங்கநல்லூர் பங்குத்தந்தை ஜாக்சன், திசையன்விளைபங்குத்தந்தை டக்லஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற் றது.வள்ளியூர் அருட்பணி இசிதோர் மறையுறை ஆற்றினார். காலை 11 மணிக்கு அன்னையின் தேர்ப் பவனி நடைபெற்றது. மாலை 6:30 மணிக்கு ஜெபமாலை நற்கருணைப்பவனி நடைபெற்றது. சாத்தான்குளம் மறை வட்ட முதன்மைக்குரு ரவிபாலன் தலை மையில் சோமநாதபேரி பங்குத் தந்தை ஜெகதீஷ் மறையுரை ஆற்றினார். திரு விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை தா. சலேட் ஜெரால்டு தலைமையில் அருட்ச கோதரிகள், விழாக் குழுவினர் பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.