கூட்டாம்புளி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் கொடை விழா

Narayanasamy kovil

கூட்டாம்புளி ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் கொடை விழா

கூட்டாம்புளி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் கொடை விழா நடந்து வருகிறது.

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளி அருள் மிகு ஸ்ரீமன் நாராயண சுவாமி கோயில் கொடை விழா வருடம் தோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டுக்கான கொடைவிழா நிகழ்ச்சி 19.04.2024ம் தேதி வெள்ளிக்கிழமை கால் நாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 24ம் தேதி புதன் கிழமை மாலை 5 மணியளவில்  திருவிளக்கு பூஜை வழிபாடு நடந்தது. இரவு 7 மணிக்கு ஸ்ரீ சந்தனமுத்து மாரியம்மன் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 25ம் தேதி வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு ராயல் அபிநயா நடன நாட்டிய கலை குழுவினரின் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. 26ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு ஸ்பிக்நகர் பெரியசாமி குழுவினரின் வில்லைசையும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. மதியம் 12.30 மணிக்கும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இரவு 10 மணிக்கு முறம்மண் ஆண்டிச்சாமி குழுவினரின் நையாண்டி மேளத்துடன் கரகாட்ட நிகழ்ச்சியும், நள்ளிரவில் சாமிக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து வான வேடிக்கையுடன் இராஜமேளம் முழங்க சுவாமி சுப்பரபவனி வந்தார். இரவில் தொடங்கி விடியும் வரை விழா கோலாம் பூண்டிருந்தது கூட்டாம்புளி. இன்று(27ம்தேதி) மதியம் சுவாமிக்கு பொங்கலிட்டு மதிய பூஜை நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு மேல் வரிப்பழம் வழங்கபடுவதை தொடர்ந்து இரவு 7 மணிக்கு எஸ்.ஆர்.சந்திரன் இசைக்குழுவினரின் இன்னிசைக்கச்சேரி நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கே.பிச்சைக்கனிநாடார், ஆர்.பி.குணபாலன் நாடார், எஸ்.சுப்பு நாராயணன் நாடார், பி.ரவித்திலகர் நாடார் மற்றும் வரிதாரர்கள் செய்து வருகின்றனர்.