புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா கோலாகலம்.!

Thoothukudi Panimaya madha

புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா கோலாகலம்.!

உலப்புகழ் பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத் திருவிழா இன்று(5.8.2023) கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் தினசரி ஆயர்கள் முன்னிலையில் சிறப்பு திருப்பலிகள், செபமாலை, நற்கருணை ஆசிரி ஆகிவை நடைபெற்று வந்தது. 

இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். நேற்று காலை முதல் திருப்பலி,இரண்டாம் திருப்பலி நடந்தது. காலை 9.30 மணிக்கு நற்செய்தி பணியாளர்களுக்கான திருப்பலி,11.00 மணிக்கு இளையோருக்கான திருப்பலி,மாலை 5.00 மணிக்கு தோணி, விசைப்படகு கட்டுமரத் தொழில்கள் சிறப்பதற்கு திருப்பலி நடந்தது. மாலை 6.30 மணிக்கு பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. கோவா உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிரிப்நேரி முன்னிலை வகித்தார். வ்பனிமய மாதா ஆலய பங்கு தந்தை குமார்ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இரவு சுமார் 9.00 மணியளவில் பேராலய வளாகத்தில் பனிமய அன்னையின் திருவுருவப் பவனி நடந்தது. மரியே வாழ்க, பனிமய அன்னையே வாழ்க, என பவனியின் போது மக்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். பல ஆயிரம் பேர் பங்கேற்றனர். 

இன்று தூய பனிமய அன்னையின் பெருவிழா நடந்து வருகிறது. காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலி, 5.15 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி, காலை 7.00 மணிக்கு தங்கத்தேர் சிறப்பு திருப்பலி நடந்தது. காலை 8.00 மணிக்கு அன்னையின் தங்கத்தேர் பவனி தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி வந்து, மதியம் 12.00 மணியளவில் ஆலயத்தை அடைந்தது. 12.30க்கு தங்கத்தேர் நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3.00 மணிக்கு செபமாலை, அருளிக்க ஆசீர், மாலை 4.00 மணிக்கு பெருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது. மாலை 6.00 மணிக்கு தங்கத்தேர் நன்றி விழா, இரவு ப்7.00 மணிக்கு புனித பனிமய அன்னைக்கு குடும்பங்களை ஒப்புக்கொடுத்தல், நற்கருணை ஆசிரி நடக்கிறது.