கூட்டாம்புளியில் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழா

isha

கூட்டாம்புளியில் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழா

கூட்டாம்புளியில் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழா நடைபெற்றது.

கிராமிய அளவில் ஆண்கள் மற்றும் பெண்களை விளையாட்டு துறையில் ஊக்கப்படுத்தும் விதமாக அமெச்சூர் விளையாட்டு வீரர்கள் அல்லாத கிராமப்புற இளைர்களுக்கான விளையாட்டு திருவிழா ஈஷா யோகா சார்பில் ஆண்டுதோறும் தென்னிந்திய அளவிலான கிராமோத்சவம் என்கிற கிராமிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

இந்த ஆண்டு கிராமோத்சவம் கிராமிய விளையாட்டு போட்டிகளின் ஒரு பிரிவாக கூட்டாம்புளி, ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளியில் 2 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது. இதில், ஆண்களுக்களுக்கான கைப்பந்து போட்டியில் 22 அணிகள் கலந்து கொண்டன. பெண்களுக்கான எறிபந்து போட்டியில் 16 அணிகள் பங்குபெற்றன. முதல் நாளில் முன்னாள் கைபந்து வீரர் ராமச்சந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். 

இதில், பெண்களுக்கான எறிபந்து இறுதி போட்டியில் சாயர்புரம் அணியும், ஈஷா ஸ்டார்ஸ் அணியும் மோதின. இதில் சாயர்புரம் அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது.

அதேபோல் ஆண்களுக்கானர கைப்பந்து இறுதி போட்டியில் முதலூர் எம்கேசி அணியும், எட்டையபுரம் லியோ கிளப் அணியும் மீதான. இதில் முதலூர் எம்கேசி அணி வெற்றி பெற்று முதல் பரிசை வென்றது. இப்போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற அணிகள் திருநெல்வேலியில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

டாக்டர் பெத்துகனி வெங்கட் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். ராமச்சந்திரன், கோபால்நாடார், குணபாலன், தேன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரமேஷ் பாபுஜி, ஈஷா தன்னார்வலர்கள் கணேசன், செந்தில், ராஜேஷ், கண்ணன், பால்ராஜ், தமிழ்செல்வன், உடற்கல்வி  பிரபாகரன், மகேஷ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.