காது கேட்காத மரம் ஏறும் தொழிலாளி - நாசரேத் ரயில்வே கேட்டை கடக்கும்போது ரயில் மோதி பலி

Accident

காது கேட்காத மரம் ஏறும் தொழிலாளி - நாசரேத் ரயில்வே கேட்டை கடக்கும்போது ரயில் மோதி பலி

நாசரேத்,ஆக.13: காது கேட்காத மரம் ஏறும் தொழிலாளி நாசரேத் ரயில்வே கேட்டை கடக்கும்போது ரயில் மோதி பலியானார்.  

நாசரேத் அருகில் உள்ள மூக்குப்பீறியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் வயது 55. தென்னை, பனை மரங்கள் ஏறும் தொழிலாளி. இவருக்கு சரிவர காது கேட்காதாம். இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். ஒரு மகனும்,ஒரு மகளும் உள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை 8.45 மணியளவில் நாசரேத் பஜாருக்கு சென்றுள்ளார். அப்போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் இரயில் நாசரேத் இரயில் நிலையத்திற்குள் நுழைந்திருக்கிறது. இரயில் வரும் சத்தம் கேட்காததால் லெட்சுமணன் இரயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டிருக்கிறார். அப்போது இரயிலில் அடிபட்டு அந்த இடத்திலே பலியானார். இது குறித்து இரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.