முதலமைச்சர், துணைமுதலமைச்சரின் பணிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது - அமைச்சர் கீதாஜீவன் புகழாரம்

DMK News

முதலமைச்சர், துணைமுதலமைச்சரின் பணிகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறது - அமைச்சர் கீதாஜீவன் புகழாரம்

துணை முதல்வராக பொறுப்பேற்றதும் தனது நடவடிக்கையில் வேகத்தை காட்ட முடிவு செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அந்த வகையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் விருதுநகரில் நடத்தப்பட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கிருந்து ஐந்து மாவட்டங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.  

இதன் தொடர்புடைய விழா தூத்துக்குடி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ் வரவேற்றார். கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஐஸ்வரியா, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் 403 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். பின்னர் அவர், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள் விளையாட்டுத்துறைக்கு மிகவும் புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதனடிப்படையில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை விருதுநகரில் துவக்கி வைத்ததையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 33 வகையான பல்வேறு விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது. இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கூடுதல் முயற்சியாக எதிர்கால இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டத்தை ஊராட்சிமன்ற தலைவர்கள், ஊராட்சித்துறை அதிகாரிகள் செயல்படுத்த முன்வரவேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடுவதின் மூலம் உடல் ஆரோக்கியம் கிடைக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பள்ளி படிப்பு மாணவர்கள் மாலை நேரங்களில் செல்போன் மூலம் பலவற்றை பார்ப்பதால் உடல் ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுகிறது. 

ஆரோக்கியம் மேம்பட பெற்றோர்களும், ஆசிரியர்களும் தங்களது குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டியின் மூலம் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும். ஆசிய மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 1300 பேருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊக்கதொகை வழங்கி வருகிறார். விளையாட்டுத்துறையில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. செஸ் போட்டி, கார் பந்தயம் என ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து விளையாட்டுத்துறையை தமிழகம் ஊக்குவித்து வருகிறது. தமிழகம் முதலமைச்சரின் திட்டங்களும், துணை முதலமைச்சரின் பணிகளும் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து சென்று எதிர்கால சமூதாயத்தினரின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியம் மனவலிமை எல்லோருக்கும் கிடைக்கும். இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். 

விழாவில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைமேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலெட்சுமி, கலைச்செல்வி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உலகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மாப்பிள்ளையூரணி ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்ராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட நிர்வாகிகள் அருண்குமார், கவிதாதேவி, பழநி, நாகராஜன், கோகுல்நாத், மாவட்ட பிரதிநிதிகள் ராஜ்குமார், செல்வகுமார் பகுதி செயலாளர்கள், ஜெயக்குமார், மேகநாதன், மாநகர துணை செயலாளர் பிரமிளா, மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன்ஜேக்கப், கிறிஸ்டோபர் விஜயராஜ், சாகுல்ஹமீது, சத்யா, பெல்லா, ரூபராஜா, சக்திவேல், வினோத், சீதாராமன், ரேவதி, இந்திரா, கவுன்சிலர்கள் சரண்யா, சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், கீதாமுருகேசன், சரவணக்குமார், ராமுஅம்மாள், வைதேகி, ஜெயசீலி, மரியகீதா, பவானி, அந்தோணிபிரகாஷ் மார்ஷலின், ஜான்சிராணி, மகேஷ்வரி, ஜாக்குலின் ஜெயா,  ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர் ஊராட்சிமன்ற உறுப்பினர் பாரதிராஜா, வட்ட செயலாளர்கள் சுப்பையா, கருப்பசாமி, சதீஷ்குமார், வட்டபிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜோஸ்பர், போல்பேட்டை பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர், அல்பர்ட், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட பல்வேறு ஊராட்சியை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். கூடைப்பந்து பயிற்சியாளர் ஆனந் நன்றி கூறினார்.