அமெச்சூர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி! எம்.பி கனிமொழி, அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணன் பரிசுகளை வழங்கினர்
nazareth
நாசரேத்,மார்ச். 04:
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட அளவிலான ஆண், பெண்களுக்கான கபடி சாம் பியன்ஷிப் போட்டியில் ஆண்கள்பிரிவில் விளாத்திகுளம் அணி முதல் இடத்தையும் பெண்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதல் இடத்தையும் பெற்றது.வெற்றிபெற்றஅணிகளுக்கு கனி மொழி கருணாநிதி, அமைச்சர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் ஆகியோர் பரிசு களை வழங்கினர்.
துத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகம் சார்பில் தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார் ஊழிய நிறுவனத் தின் ஏலீம் விளையாட்டுத் திடலில் 2 நாள்கள் தூத்துக் குடி மாவட்ட சீனியர் ஆண், பெண் 38-வது மாவட்ட சாம் பியன் ஷிப்க்கான கபாடி போட்டி நடைபெற்றது.ஆண் களுக்கான கபடிபோட்டியை நாலுமாவடி இயேசு விடுவி க்கிறார்ஊழியபொதுமேலா ளர் செல்வக்குமார் துவக்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் 12 அணிகளும் பெண்கள் பிரி வில் 12 அணிகளும் விளை யாடியது. ஆண்கள் பிரிவில் விளாத்திகுளம் அணிமுதல் இடத்தையும் பெண்கள் பிரிவில் தூத்துக்குடி அணி முதலிடத்தையும் பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்கள் அணிக்கு முதல்பரிசான ரூ.50,000-ம் மற்றும் கோப்பையை தூத் துக்குடி அணியும், 2-வது பரிசான ரூ.30,000-ம் மற்றும் கோப்பையை கோவில்பட்டி அணியும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசான ரூ.20,000 -த்தை ஓட்டப்பிடாரம், புன்ன க்காயல்அணிகளும்மற்றும் கோப்பைகளையும் தூத்துக் குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற ஆண்கள் அணிக்கு முதல்பரிசான ரூ.50,000-ம் மற்றும் கோப்பையை விளா த்திக்குளம் அணியும், 2-வது பரிசான ரூ.30,000-ம் மற்றும் கோப்பையை ஓட்டப்பிடாரம் அணியும், மூன்றாம் மற்றும் நான்காம் பரிசான ரூ.20,000 -த்தை கயத்தார், ஸ்ரீவைகு ண்டம் அணிகளும் மற்றும் கோப்பைகளையும்திருச்செ ந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், தமிழக மீன் வளம்,மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ஆர்.இராதாகிருஷ் ணன் வழங்கினார்.
பரிசளிப்பு விழாவில் கபடி கழகச் செயலாளர் கிறிஸ் டோபர்ராஜன் வரவேற்று பேசினார்.முன்னாள் பாரா ளுமன்றஉறுப்பினர்ஏ.டி.கே. ஜெயசீலன், மாநில மகளிர் அணி துணைச் செயலாள ரும்,மானாமதுரைசட்டமன்ற உறுப்பினருமான தமிழரசி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டே யன்,தூத்துக்குடி மாநகரா ட்சி வணக்கத்திற்குரிய மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ். ஆர்.எஸ்.உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்இராமஜெயம், ஒன்றிய திமுக செயலாளர் நவீன்குமார், வழக்கறிஞர் செல்வக்குமார், ஆழ்வார்தி ருநகரி யூனியன் சேர்மன் ஜனகர்,ஆத்தூர்சதீஷ்குமார் எஸ்.ஜே.ஜெகன், சாகுல் ஹமீது, இசக்கி பாண்டியன் கபடி கந்தன்,ஒன்றிய திமுக பொருளாளர் பாதாளமுத்து, மாவட்ட பிரதிநிதி கலைய ரசு, ஓய்யான்குடி கிளைக் கழகச் செயலாளர் கிருபை ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமைச் சூர் கபடிக் கழகத் தலைவர் அனிதா ஆர்.இராதாகிருஷ் ணன் தலைமையில் சேர் மன் சகோ.மோகன் சி. லாச ரஸ் முன்னிலையில் செய லாளர் கிறிஸ்டோபர்ராஜன், பொருளாளர் ஜிம்ரீவ்ஸ், ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற கப டிவீரர் மணத்தி கணேசன், தூத்துக்குடி மாவட்ட அமெச் சூர் கபடிக்கழக நடுவர் குழு சேர்மன் கண்ணன், கன்வீனர் மைக்கேல் ஆகியோர் செய்திருந்தனர்.