இந்து கோயில்கள் நிர்வாகத்திற்கு தனி வாரியம் - விஸ்வ ஹிந்து நிறுவன தலைவர் அறிவுறுத்தல்

hindu kovil

இந்து கோயில்கள் நிர்வாகத்திற்கு தனி வாரியம் - விஸ்வ ஹிந்து நிறுவன தலைவர் அறிவுறுத்தல்

இந்து கோயில்களுக்கான நிர்வாகத்தை அரசின் தலையீடு இல்லாமலும், பாரம்பரியம் குறையாமலும் தனி வாரியம் மூலமாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழ் நாடு விஸ்வ ஹிந்து வித்யாகேந்திராவின் நிறுவன தலைவர் ஸ்ரீவேதாந்தம்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்ரீவைகுண்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பெருமாளுக்குரிய ஸ்தலமான திருப்பதி வெங்கடாசலபதியை உயர்ந்தவர்கள்,ஏழை,எளியவர்கள் என்றில்லாமலும்,ஜாதி,மத, இன பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் வழிபட்டு செல்கின்றனர். இதுதான் சனாதனம் என்பதாகும்.இது சிலருக்கு புரியவில்லை.இந்த வகையில், திருப்பதி போன்று தென்னகத்தில் பூலோக வைகுண்டமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நவ திருப்பதி பெருமாள் கோயில்கள் சிறப்பு பெற்று திகழ்கின்றன. 

கங்கை நதிக்கு நிகரான தாமிரபரணி நதியானது தற்போது மாசுபட்டு விட்டது வருந்துவற்கு உரியதாகும். தாமிரபரணி நதியை சுத்தம் செய்து அதன் புனிதத்தை காக்க வேண்டும். பொதுவாக ஒரு அரசானது சமய சார்பற்ற அரசாக எல்லோருக்கும் பொதுவான அரசாக இருக்க வேண்டும். எல்லா மத்த்திலும் சிற்சில குறைகள் இருக்கலாம். ஆனால் அதற்காக மற்ற மதங்களை எல்லாம் விட்டுவிட்டு, இந்து மதத்தை மட்டும் குறிப்பிட்டு குறை சொல்லி பேசுவது என்பது சரியானதல்ல. இந்து கோயில் வழிபாடுகளுக்கு என்று அதற்கு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். 

தொடர்ந்து எட்டு ஆண்டுகள் முறையாக ஆகம விதிகள், மந்திரங்களை கற்றவர் தான் இறை வழிபாடு பரிபூரணமாக முழுமையாஹ செய்ய முடியும். அதை விடுத்து ஓராண்டில் பயிற்சி பெற்றவர்களையும், அதனைக் கூட முழுமையாக கற்காதவர்களையும் இறைவழிபாட்டில் புகுத்துவது என்பது சரியானது அல்ல. 

இந்து கோயில்களுக்கு நிர்வாகம் என்பது எக்காரணம் கொண்டும் அரசின் தலைவீடு இல்லாமலும், பாரம்பரியம் குறையாமலும் நடைபெற வேண்டியது அவசியமாகும். எனவே இதற்கென தனி வாரியத்தை அமைத்து இந்து கோயில்களுக்கான நிர்வாகத்தை செயல்படுத்திட வேண்டும் என்றார். 

பேட்டியின்போது, தமிழ்நாடு விஸ்வஹிந்து வித்யாகேந்திராவின் பொதுச்செயலாளர் டாக்டர்.கிரிஜாசேஷாத்திரி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.