நாலுமாவடியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை! - திரளானோர் பங்கேற்பு
Nalumavadi News
நாசரேத் பிப்.2
நாலுமாவடியில் நடந்த தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்கள் சார்பில் வருடந்தோறும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் இந்த ஆண்டும் பிப்ரவரி 1 ம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1 மணி முதல் 4 மணி வரை தேர்வு எழுதும் மாணவ_ மாணவிகளுக்கான சிறப்பு பிரார்த்தனை நடந்தது . இயேசு விடுவிக்கிறார் ஜெபக்குழுவினர் பாடல்கள் பாடினர். இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தேவ செய்தி கொடுத்து தேர்வு எழுதும் மாணவ_ மாணவர்களுக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினார் . படிப்பிற்கான ஆலோசனை, சாதனையாளர்களின் அனுபவ சாட்சி, படக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3 ஆயிரம் மாணவ_ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
nadunilai.com