தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் - எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார்
Admk News
கோடை வெயில் வாட்டி வதைக்கும் இந்நேரத்தில் தமிழகம் முழுவதும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் பொருட்டு நீர் மோர் பந்தல்கள் அமைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளரும், வட்ட செயலாளருமான திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதனை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைத்தார். அப்போது அவர் மோர், சர்பத், பழரசம், ரோஸ்மில்க், இளநீர், எலிமிச்சை ஜூஸ் உள்ளிட்ட குளிர்பானங்கள் மற்றும் தர்பூசணி பழம், வாழைப்பழம், செவ்வாழை போன்ற பழவகைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில வர்தகஅணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளருமான இரா.சுதாகர், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், ஒன்றிய கழக செயலாளருமான விஜயகுமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்.ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றியச் செயலாளர் காசிராஜன், வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூமணி, சரவணபெருமாள், பகுதி செயலாளர்கள் முருகன்,செண்பக செல்வன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல் ராஜ், ஆழ்வை ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் அங்கமங்கலம் பாலமுருகன், வட்ட செயலாளர்கள் ஆர்.எல்.ராஜா, டேவிட்ஏசுவடியான், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் டைகர் சிவா, மாவட்ட ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன்,மாவட்ட இளைஞர் பாசறை பொருளாளர் பரிபூரண ராஜா, மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் அலெக்ஸ்ஜி, முத்துகனி, பி.ஜே.சி சுரேஸ், ஜான்சன் தேவராஜ், சேவியர் ராஜ், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், பழனிகுமார், திலகர், வட்ட பிரதிநிதி முத்துலெட்சுமி, கே.டி.சி பேச்சியப்பன் மற்றும் 39வது வட்ட நிர்வாகிகள் மெத்த கடை ஆறுமுகம், ஒர்க் ஷாப் ரமேஷ், சங்கரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.