ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழா - சிறப்பாக கொண்டாடிட எஸ்.பி.சண்முகநாதன் அழைப்பு
S.P.Shanmuganathan
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் வரும் 24ம் தேதி வருகிறது. அன்றைய நாளில் அதிமுக கொடியேற்றி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் அதிமுகவினர் கொண்டாட வேண்டும் என்று மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்தநாள்விழா வருகிற 24.02.2024 (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அந்நாளில் மக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள் வழங்கி வெகுவிமர்சையாக கொண்டாடிடுமாறுஅதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் தமிழக முதலமைச்சர், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அன்றைய தினம் காலை 9.00 மணியளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அலுவலகம் அமைந்துள்ள டூவிபுரம் 7வது தெருவில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது. அதற்கு நான் தலைமை தாங்குகிறேன். இதில் அதிமுக தலைமை நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளை நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொண்டர்கள் மகளிர்கள் பெருத்திரளாக கலந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், தூத்துக்குடி தெற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய, நகர, மாநகரப்பகுதி, பேரூராட்சி, வட்ட, கிளைக் கழகங்களில் நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் மாண்புமிகு அம்மா அவர்களின் பிறந்தநாள்வழாவை கொண்டாடிடும் விதமாக அவர்களின் திருவுருவ படத்தினை அலங்கரித்து கழக கொடியேற்றி நலத்திட்டங்கள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.