காமராஜரின் தொலைநோக்கு தலைமை, ஏழைகளை மேம்படுத்தும் முயற்சிகள் மதிக்கத்தக்கது - மோடி புகழாரம்
k.kamarajar - Modi

தமிழக முன்னாள் முதல்வரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான பெருந்தலைவர் காமராஜரை பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார்.
காமராஜரின் தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்தும் முயற்சிகள் மதிக்கத்தக்கது என்று பிரதமர் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். அவரது எக்ஸ் தளத்தில், காமராஜரின் பிறந்த நாளை நினைவு கூறுகிறேன். கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அவரது தொலைநோக்கு தலைமை மற்றும் ஏழைகளை மேம்படுத்தும் முயற்சிகள் மதிக்கத்தக்கது. அவருடைய லட்சியத்தை நிறைவேற்றி, நீதியும், கருணையும் கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்ப எங்களின் உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.