தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலை - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

Cruise Bernadas

தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் சிலை - காணொலி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகரின் தந்தை என்று அழைக்கப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் திருவுருவச் சிலை திறக்கப்படும் என்று கடந்த தேர்தலின்போது திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் குவிமாடத்துடன் கூடிய திருவுருவச் சிலை நிறுவப்பட்டது.  ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் பிறந்த நாளான இன்று (15.11.2023) அச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

அதனைத்தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் முழு திருவுருவச் சிலைக்கு மலர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ச.தினேஷ்குமார் தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் முழு திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மேலும் இதில், மாவட்ட ஊராட்சித்தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் கந்தசாமி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.